You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள், 41 இணை அமைச்சர்கள் யார்?
நரேந்திர மோதி, ஜுன் 9-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்து தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமரானவர் என்ற சிறப்பை மோதி பெற்றிருக்கிறார்.
நரேந்திர மோதியுடன், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், நிதின் கட்கரி ஆகிய, முந்தைய மத்திய அமைச்சரவையில் இருந்தவர்கள் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
அமைச்சரவையில் சில புதிய முகங்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
யாரெல்லாம் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர், யாரெல்லாம் இணை அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர் என்ற முழு பட்டியல் இதோ.
கேபினட் அமைச்சர்கள் பட்டியல்
1) ராஜ்நாத் சிங் - பா.ஜ.க
2) அமித் ஷா - பா.ஜ.க
3) நிதின் கட்கரி - பா.ஜ.க
4) ஜே.பி.நட்டா - பா.ஜ.க
5) சிவராஜ் சிங் சௌஹான் - பா.ஜ.க
6) நிர்மலா சீதாராமன் - பா.ஜ.க
7) எஸ்.ஜெய்சங்கர் - பா.ஜ.க
8) மனோகர் லால் - பா.ஜ.க
9) ஹெச்.டி.குமாரசாமி - மதச்சார்பற்ற ஜனதா தளம்
10) பியுஷ் கோயல் - பா.ஜ.க
11) தர்மேந்திர பிரதான் - பா.ஜ.க
12) ஜிதன் ராம் மாஞ்சி - ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா
13) லல்லன் சிங் (ராஜீவ் ரஞ்சன்) - ஐக்கிய ஜனதா தளம்
14) சரபானந்த சோனோவால் - பா.ஜ.க
15) கிஞ்சரப்பு ராம் மோகன் - தெலுங்கு தேசம் கட்சி
16) வீரேந்திர குமார் - பா.ஜ.க
17) ஜுவால் ஓரம் - பா.ஜ.க
18) பிரகலாத் ஜோஷி - பா.ஜ.க
19) கிரிராஜ் சிங் - பா.ஜ.க
20) அஷ்வினி வைஷ்ணவ் - பா.ஜ.க
21) ஜோதிராதித்ய சிந்தியா - பா.ஜ.க
22) பூபேந்தர் யாதவ் - பா.ஜ.க
23) அன்னபூர்ணா தேவி - பா.ஜ.க
24) கஜேந்திர சிங் - பா.ஜ.க
25) கிரண் ரிஜிஜு - பா.ஜ.க
26) ஹர்தீப் சிங் புரி - பா.ஜ.க
27) மன்சுக் மாண்டவியா - பா.ஜ.க
28) ஜி கிஷன் ரெட்டி - பா.ஜ.க
29) சிராக் பாஸ்வான் - லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)
30) சி.ஆர்.பாடில் - பா.ஜ.க
இணை அமைச்சர்கள் பட்டியல்
1) இந்தர்ஜித் சிங் - பா.ஜ.க
2) ஜிதேந்திர சிங் - பா.ஜ.க
3) அர்ஜுன் ராம் மேக்வால் - பா.ஜ.க
4) பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் - சிவசேனா
5) ஜெயந்த் சிங் சௌதரி - ராஷ்ட்ரிய லோக் தளம்
6) ஜிதின் பிரசாதா - பா.ஜ.க
7) நித்யானந்த் ராய் - பா.ஜ.க
8) ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாய்க் - பா.ஜ.க
9) பங்கஜ் சௌதரி - பா.ஜ.க
10) எஸ்.பி சிங் பாகேல் - பா.ஜ.க
11) கிருஷண் பால் - பா.ஜ.க
12) ஷோபா கரண்ட்லாஜே - பா.ஜ.க
13) கீர்த்தி வர்தன் சிங் - பா.ஜ.க
14) ராம்தாஸ் அத்வாலே - இந்தியக் குடியரசுக் கட்சி
15) பி.எல்.வர்மா - பா.ஜ.க
16) ஷாந்தனு தாக்குர் - பா.ஜ.க
17) அனுப்ரியா படேல் - பா.ஜ.க
18) சுரேஷ் கோபி - பா.ஜ.க
19) வி.சோமண்ணா - பா.ஜ.க
20) எல்.முருகன் - பா.ஜ.க
21) அஜய் தம்தா - பா.ஜ.க
22) பெம்மாசனி சந்திரசேகர் - பா.ஜ.க
23) பாகீரத் சௌதரி - பா.ஜ.க
24) அனுப்ரியா படேல் - அப்னா தளம் (சோனேலால்)
25) சதீஷ் சந்திர தூபே - பா.ஜ.க
26) சஞ்சய் சேத் - பா.ஜ.க
27) ரவ்னீத் சிங் பிட்டு - பா.ஜ.க
28) துர்கா தாஸ் உய்கே - பா.ஜ.க
29) ரக்ஷா நிகில் கட்ஸே - பா.ஜ.க
30) சுகந்தா மஜும்தார் - பா.ஜ.க
31) ராஜ்பூஷன் சௌதரி - பா.ஜ.க
32) பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா - பா.ஜ.க
33) ஹர்ஷ் மல்ஹோத்ரா - பா.ஜ.க
34) டோகன் சாஹு - பா.ஜ.க
35) நிமுபென் பம்பானியா - பா.ஜ.க
36) முரளிதர் மொஹோல் - பா.ஜ.க
37) ஜார்ஜ் குரியன் - பா.ஜ.க
38) பபித்ர மகெரிட்டா - பா.ஜ.க
39) சாவித்திரி தாக்குர் - பா.ஜ.க
40) கமலேஷ் பாஸ்வான் - பா.ஜ.க
41) ராம்நாத் தாக்குர் - ஐக்கிய ஜனதா தளம்
யாருக்கு எந்த இலாகா?
மத்திய அமைச்சரவை பதவியேற்கும் முன்பு பட்டியலில் இடம் பெறப்போகும் பெயர்களைப் பற்றி பல்வேறு யூகங்கள் நிலவி வந்தன. யாருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படும், யாருக்கு இடம் கிடைக்காமல் போகும் என்ற குழப்பங்களும் மக்கள் மத்தியில் காணப்பட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் முக்கியஸ்தர்களின் பெயர்களை வைத்து ஊடகங்கள் விவாதித்து வந்தன. மேலும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களின் பின்னணியில் அரசியல் ஆய்வாளர்கள் வெவ்வேறு பெயர்களை முன்வைத்து வந்தனர்.
என்.டி.ஏ கூட்டத்தில் பா.ஜ.க அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த விதத்தின் அடிப்படையில், அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பெயர்களை அரசியல் ஆய்வாளர்கள் ஊகித்து வந்தனர்.
மோதி அமைச்சரவை 3.0-இல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும். ஆனால், முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 20 அமைச்சர்கள் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்ததால், பா.ஜ.க-வின் புதிய முகங்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு எந்த இலாகா என்று இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)