மஹிந்த ராஐபக்ஷ பிரதமரானது பற்றி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்ன கூறுகிறது?

மஹிந்த ராஐபக்ஷ

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

"நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது. அவ்வாறு முடிவுகளைச் சொல்வது பொருத்தமில்லை என்பதால் அந்த நிலைமை தொடர்பில் தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் கலந்து பேசி ஒரு தீர்மானமெடுத்து எங்களது முடிவுகளை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வோம்," என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளதால் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மாவை சேனாதிராஜா தெரிவித்த கருத்துகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ ஆட்சிக் காலத்தில் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன எமக்கு எதிராக இழைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் இனப்பிரச்சனைக்கான தீர்வும் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தன. இதனையடுத்து கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எமது மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரளவளித்து அவரை ஐனாதிபதியாக்கியிருந்தனர்.

இதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதும் எமது மக்கள் எமக்கு ஆதரவை வழங்கி எங்களுக்கு அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றனர். அதற்கமையவே நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய கட்சியின் நலன்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவை பிரதமராக நியமித்திருக்கின்றார். இத்தகைய மாற்றங்களால் நாட்டில் தற்போது பெரும் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன.

இலங்கை

அதாவது ரணில் விக்கிரமசிங்க தான் இன்னும் பிரதமராக நீடிப்பதாகக் கூறுகிறார். ஜனாதிபதி அவரை நிக்கியுள்ளதாகவும் மகிந்த ராஐபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளதாகவும் கூறுகின்றார். அதற்கமைய அவருக்கு பெரும்பான்மை உள்ளதா, இல்லையா என்பதை நிருபிக்க வேண்டியும் இருக்கின்றது.

அதே நேரத்தில் குறிப்பாக மைத்திரி - ரணில் கூட்டரசின் காலத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கி புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. முதலாவதாக அரசியலமைப்பு பிரச்சனை தொடர்பில் ஆராய்ந்து முதாவது தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கிறது.

Presentational grey line

தொடர்புடைய செய்திகள்

ஏனெனில் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் ஒருமித்த நாடு என்று குறிப்பிடப்பட்ட போது மகிந்த ராஐபக்ஷ மற்றும் வழக்கறிஞர் சங்கம் எல்லாம் சமஷ்டி என்று தான் சொல்லி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தனர். ஆனபடியால் அவர்கள் இனிமேல் எப்படி நடக்கப் போகிறார்கள் அந்த அரசமைப்பிற்கு என்ன நடக்கப் போகின்றது என்பது கேள்வி.

அதே நேரம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வடக்கில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை பொது மக்களிடம் கையளிக்க வேண்டுமென ஜனாதிபதி ஒர் உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றார். ஆனாலும் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளால் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எல்லாம் இனி என்ன நடக்குமென்று எண்ணுகின்றோம்.

ராஜபக்ஷ - மைத்ரிபால

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜபக்ஷ - மைத்ரிபால

அதே போன்று இன்னும் சில நாட்களில் அதிகமாக கோத்தபாய ராஐபக்ஷவின் நடவடிக்கைகள் பலமடையும். அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் ஆகவே இனி அவர் எல்லாம் எவ்வாறு நடக்கப் போகின்றார் என்பதில் எங்களுக்கு பல நெருக்கடி இருக்கிறது.

அவ்வாறானாதொரு சூழ் நிலையில் இப்ப உள்ள நெருக்கடியான நிலைமையில் ஜனாதிபதியோ மகிந்தவோ எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்களாக இருந்தால் நாங்கள் எங்களுடைய இனத்தின் நலன்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவோம். அதே நேரத்தில் நாங்கள் இருக்கின்ற சூழ்நிலைகளை மதிப்பீடு செய்து எங்களுடைய நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க வேண்டிள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் அனுசரனையுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. கடந்த 2011 ஆம் அண்டு முதல் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச சமூகத்துடன் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. ஆனபடியால் அதனை மனதில் வைத்து அவர்களோடும் இந்தச் சூழல் தொடர்பில் பேச வேண்டும்.

ஆகவே எங்கள் கட்சியுடனும், எமது மக்களுடனும், சர்வதேச சமூகங்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனபடியால் இந்த இருவாரங்களில் அத்தகைய பேச்சுக்களை நடத்தி அதன் பின்னர் ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு எண்ணியிருக்கின்றோம்.

ஆகையினால் இப்போது அவசரப்பட்டு முடிவெடுக்காமல் பொருத்திருந்து பொருத்தமான தீர்மானத்தை எடுக்க உள்ளோம் என்றார்.

Presentational grey line

தொடர்புடைய செய்திகள்

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :