You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது
தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஓர் படகில் இரு சிறுவர்கள் , ஓர் பெண் உட்பட ஆறுபேர் படகு மூலம் தாயகம் திரும்பிய நிலையில் இலங்கை கடற்பரப்புக்குள் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்களை ஏற்றிவந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆறுபேர் மட்டுமே தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்தவர்களை கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை இன்று யாழ் மல்லாகம் நீதிமன்றில் ஆயர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை காங்கேசன்துறை போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே, இம்மாதத்தில் இதுவரை 19 பேர் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தாயகம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்