You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசார தேரர் சாட்சியம்
கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தான் நெருக்கமாக செயல்பட்டதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கொன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அளித்த சாட்சியத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு 25 ஆம் தேதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அப்போதைய ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிவானாக கடமையாற்றிய ரங்க திசாநாயக்க ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்தபோது சாட்சியமளித்த ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்றபோதும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் தான் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.
ராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தான் உதவியுள்ளதாக கூறிய அவர், பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக அவர் ராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு ஆதரவு அளித்து வந்ததாகத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்ப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சில முக்கிய ராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளை போலீசார் கைது செய்ததாக குற்றம்சாட்டிய ஞானசார தேரர், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் ராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
மேலதிக வழக்கு விசாரணை அடுத்த மாதம் முன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக பொதுபல சேனா அமைப்பு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன் அந்த அமைப்புக்கு இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் ஆதரவு கிடைத்து வருவதாக அப்போது ஊடகங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.
இந்தப் பின்னணியில் ஞானசார தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- 'கிம் ஜாங் உன்' மீம்ஸ், ஏவுகணை சோதனை - வடகொரியா சென்ற பெங்களூரு எஃப் சி வீரரின் சுவாரஸ்ய அனுபவம்.
- தாய்மை, உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு உருக்கமான திறந்த கடிதம் எழுதிய செரீனா வில்லியம்ஸ்!
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்
- கொல்கத்தா கிரிக்கெட்: இந்தியாவின் அசத்தல் வெற்றி எப்படி சாத்தியமானது?
- 'மெர்சல்': இந்தியா முழுவதும் வைரலாகும் முன்னோட்டக் காட்சி
- கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்