You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: காயமுற்ற யானையை காப்பாற்றிய வன உயிரின இலாகா அதிகாரிகள்
இலங்கையில் அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள காடு ஒன்றில் வாயிலும் தலையிலும் துப்பாக்கிச்சூட்டு காயமுற்ற காட்டு யானையை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் வன உயிரின இலாகா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்ட இந்த யானை, சில நாட்களாக துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள காட்டுப் பகுதியில் துன்பப்பட்டு வருவதை துறைமுக பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
வன உயிரின இலாகா அதிகாரிகளுக்கு இந்த செய்தி அறிவிக்கப்பட்டதும், விலங்கு மருத்துவ நிபுணர் உள்பட வன உயிரின இலாகாவினர் இந்த யானை இருந்த இடத்திற்கு விரைந்து வந்து இதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.
இந்த யானை எழுந்து நடமாடக்கூட முடியாத அளவுக்கு சக்தி இழந்து காணப்படுவதால், இன்று செவ்வாய்க்கிழமை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன..
காயமுற்ற யானைக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி (காணொளி)
3 வயது மதிக்கத்தக்க இந்த யானையின் வாயிலும் தலையிலும் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து, அதற்கு உகந்த சிகிச்சைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வன விலங்கு மருத்துவ அதிகாரி டாக்டர் மாலக்க அபேயவர்த்ன தெரிவித்திருக்;கிறார்.
வாயில் ஏற்பட்டுள்ள து்பபாக்கிச்சூட்டு காயம் காரணமாக யானை உணவு உண்ண முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்த யானை ஏற்கனவே தும்பிக்கையில் அடிப்பட்டு காயம் பெற்றிருப்பதை அறிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தொடர்புடைய செய்திகள்
வேறொரு காட்டுப் பகுதியில் காயமுற்ற பின்னர், இந்த யானை இவ்விடத்திற்கு வந்திருக்கலாம் என இந்த பகுதிக்கு பொறுப்பான வன பாதுகாப்பு அதிகாரியான ஜே.ஏ.பி. விஜயகுமார தெரிவித்திருக்கிறார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் சுமார் 40 காட்டு யானைகள் நடமாடி வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த வருடம் மே மாதம் 6 மாத யானைக் குட்டியொன்று காட்டை விட்டு வெளியேறி வீதியை கடக்க முற்பட்ட வேளையில், துறைமுகத்தை அண்மித்த கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டது. அதனை காப்பாற்றிய பின்னர் இறந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பிரிவினையின் வலியையும் அன்பையும் சொல்லும் அருங்காட்சியகம்
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை
- இலங்கை : தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைக்க தடை
- உலக அளவில் தனி நாடு கோரிக்கைகள் எழுவது எதனால்?
- தனது தளர்ந்த மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலம்
- 'கலர் தெரபி': இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தி
- கருவுற்றதை அறியாத 10 வயது சிறுமி: கருக்கலைப்பு செய்து கொள்ள மறுப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்