You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்து
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “நாட்டில் நிலையான சமாதானத்திற்கு மற்றுமோர் படியாக இது அமையும்” என தெரிவித்திருக்கின்றார்.
கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது.
அதே ஆண்டு மே மாதம் 27ம் தேதி வர்த்தமானி (Gazatte) அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இந்த சட்ட மூலம் இந்த சட்ட மூலம் இந்த ஆண்டு ஜுன் மாதம் 21ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோர் எண்ணிக்கை என்ன ?
இலங்கையில் 1983-2009 போர்க்காலத்தில், சுமார் 20 ஆயிரம் பேர் வரை காணாமல் போனதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட காணாமல் போனவர் பற்றிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
யுத்த காலத்து குடிமக்கள் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாக மன்னார் ஆயர் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு முறையிட்டுள்ளார்.
இவர்களில் எவரும் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ கண்டறியப்படவில்லை.
பிரபலமான சிங்கள கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட காணாமல் போன பல சிவிலியன்களில் ஒருவர்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இராணுவத்தில் சரணடைந்த பலரும் காணாமல் போயிருக்கின்றனர்.
ஐ.நா மனித உரிமைக்கவுன்சில் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
- இலங்கை மனித உரிமை மீறல்கள் மீண்டும் இழைக்கப்படாமல் இருக்க அரசு உறுதி- சமரவீர
- இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள்
- இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு)
- போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு சர்வதேச நாடுகள் வலியுறுத்தல்
- காணாமல் போனோர் விவகாரம்: வடக்கு , கிழக்கு பிரதேசங்களில் உறவினர்கள் போராட்டம்
- காணாமல் போனோர் பிரச்சனை : கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டம்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்