கொழும்பு நகருக்குள் படகு போக்குவரத்து தொடங்க திட்டம்

கொழும்பு நகருக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நகருக்குள் பயணிகள் போக்குவரத்து படகு சேவையொன்றை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு நகருக்குள் அதிக எண்ணிக்கையான வாகனங்கள் பிரவேசிப்பதன் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்துள்ள அந்த அமைச்சு, இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தது.

கொழும்பு நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களைப் பயன்படுத்தி பயணிகளுக்கான படகு சேவையொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்:

இதன்படி மட்டக்குளி -வெள்ளவத்தை , வெள்ளவத்தை -பத்தரமுல்லை , கொழும்பு - ஹங்வெள்ளை ஆகிய நகரங்களுக்கு இடையில் இந்த படகு சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொழும்பு நகரில் பெரும் வாகன நெரிசல் காணப்படும் கொழும்பு - காலி பிரதான வீதி , ஹயிலேவல் வீதி ,கொழும்பு அவிசாவளை பிரதான வீதி உட்பட பல வீதிகளில் நெரிசலை பாரிய அளவில் கட்டுப்படுத்த முடியுமென்று அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படகு சேவையை ஆரம்பிப்பதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து கேள்வி பத்திரங்கள் ( tender) கோரப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்