You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை சாலை விபத்தில் சிறுமி மரணம், வாகனம் எரிப்பு
இலங்கையில் நுவரெலியா மாவட்டம் நானுஓயா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6வயது பள்ளி மாணவி பலியான சம்பவத்தையடுத்து ஆத்திரமுற்ற பொதுமக்களால் கனரக வாகனமொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அந்த இடத்தில் சில மணித்தியாலயங்கள் பதட்டம் காணப்பட்ட நிலையில் போலிஸாரால் ராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஹட்டன் - நுவரெலியா சாலையில் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவி அந்த பகுதியிலுள்ள பள்ளிக்கூடமொன்றின் மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட வேளை இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆத்திரமுற்ற நிலையில் அந்த இடத்தில் கூடியதையடுத்து காணப்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அவ் வழியாக ஓரு சில மணித்தியாலங்கள் போக்குவரத்து தடையும் ஏற்பட்டிருந்தது.
இலங்கை போக்குவரத்துக்கு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள், 2016ல் 3,003 மரணங்கள் சாலைவிபத்தால் நேர்ந்துள்ளன என்று கூறுகின்றது.
போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலை பாதுகாப்பு துறையில் பணிபுரிந்த மூத்தஅதிகாரி காமில்லஸ் அபேகோணவர்தன சாலை விபத்துகள் காரணமாக ஒவ்வொரு 31/2 மணிநேரத்திற்கு ஒரு இலங்கையர் மரணிப்பதாக ஐலாண்ட் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்