You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசு பொறுப்பு கூற கோரி வவுனியாவில் பேரணி
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி கடந்த 26 நாட்களாக வவுனியாவில் நடைபெற்று வருகின்ற சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியினர் வவுனியா நகர வீதிகளில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
கைது செய்து பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் குறித்து முன்னைய அரசாங்கம் பொறுப்பு கூறத் தவறியிருந்தது என்றும், நல்லாட்சிக்கான அரசாங்கமாவது இதற்கு பொறுப்பு கூறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த 8 வருடங்களாக அது மௌனம் சாதித்து வருவதனால் இந்த அரசும் முன்னைய அரசாங்கததைப் போன்று நடந்து கொள்வதாக பேரணியில் பேசியவர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.
எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
இதேபோன்று கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருவேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்