விராட் கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள்

Virat Kohli becomes first Indian to score 10,000 runs ..

பட மூலாதாரம், Bci / ipl

டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகியுள்ளார் விராட் கோலி.

அவர் இந்த சாதனையை நிகழ்த்திய நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

விராட் கோலியின் முக்கிய மைல் கல் குறித்த ஆறு முக்கியத் தகவல்கள் இதோ.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

  • சர்வதேச டி20 போட்டிகள், உள்நாட்டு டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் என அனைத்து வகையான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி 10,000 ரன்களைக் கடந்துள்ளார்.
  • சென்ற வாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய போட்டியில் பங்கேற்றதன் மூலம் 200வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்தார் விராட் கோலி. ஆனால், அந்தப் போட்டியில் ஆர்.சி.பி மோசமாகத் தோற்றது.
  • ஐபிஎல் 2021 போட்டித் தொடரின் இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட்கோலி ஞாயிறன்று நடந்த போட்டியில் களம் இறங்கிய பொழுது 10,000 ரன்களை எட்ட அவருக்கு 13 ரன்களே தேவைப்பட்டிருந்தது.
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நேற்று தேவ்தத் படிக்கல் உடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 16வது ரன்னை எட்டிய பொழுது 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். நேற்று 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் கோலி.
  • சர்வதேச அளவில் இதுவரை நான்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தனர். தற்பொழுது ஐந்தாவது வீரர் ஆக்கியுள்ளார் விராட் கோலி.
  • கிறிஸ் கெய்ல் (14,275), பொல்லார்டு (11,195), ஷோயப் மாலிக் (10,808), டேவிட் வார்னர் (10,019) ஆகிய நால்வரும் முன்னதாக அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் 10,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :