இரவோடு இரவாக ராணுவ அணிவகுப்பு நடத்திய வடகொரியா மற்றும் பிற பிபிசி செய்திகள்

Kim Jong-un salutes as he walks past troops, Pyongyang (10 Oct)

பட மூலாதாரம், Reuters

வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை அனுசரிக்கும் வகையில் சனிக்கிழமையன்று அந்நாடு ராணுவ அணிவகுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அரிதிலும் அரிதாக இந்த அணிவகுப்பு பகல் நேரத்தில் நடத்தப்படவில்லை.

வழக்கமாக தனது ஆயுத பலம் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையிலேயே இத்தகைய ராணுவ அணிவகுப்புகளை வடகொரியா நடத்தும்.

சனிக்கிழமை அதிகாலை நடந்த இந்த நிகழ்வில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் இடையே நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தனது ராணுவ அணிவகுப்பு பயன்படுத்தவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவால் நடத்தப்படும் இந்த ராணுவ அணிவகுப்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் நிகழ்ந்துள்ளது.

தென்கொரிய ராணுவத்தின் தகவலின்படி இந்த அணிவகுப்பு சனிக்கிழமை அன்று விடியலுக்கு சற்று முன்பு நடந்துள்ளது. அதிகாலை நேரம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்கள் எதுவும் தெரியவில்லை.

வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகத்தினர் இந்த ராணுவ அணிவகுப்பை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

Soldiers march in Pyongyang

பட மூலாதாரம், AFP

இந்த ராணுவ அணிவகுப்பின் முடிவில் உரையாற்றிய கிம் வட கொரியாவில் யாருக்கும் வைரஸ் தொற்று உண்டாகாமல் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவவில்லை என்று கிம் தொடர்ந்து கூறி வந்தாலும் உயர்மட்ட அலுவலர்களுடனான சந்திப்பை அடிக்கடி நடத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக அமலில் உள்ளன.

Banner image reading 'more about coronavirus'
Banner

தரையில் அமர வைக்கப்பட்ட தலித் பெண் ஊராட்சி தலைவர்

தரையில் அமரவைக்கப்பட்ட தலித் ஊராட்சி தலைவர்

கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் அமைப்பு முறையில் சாதி

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

எந்தவொரு இன வன்முறையிலும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை போலீசார் பதிவுசெய்வதில்லை.

விசாரணை சரியாக நடைபெறுவதில்லை, போதுமான ஆதாரங்களை சேகரிப்பதில்லை, இறுதியாக, முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

இலங்கைக்கு பயணம் செய்துள்ள சீன குழு

இலங்கைக்கு விஜயம் செய்த சீன தூதுக்குழு

பட மூலாதாரம், Sri Lanka PMO MEDIA

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் சீன விசேட குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வலுப் பெற்றிருந்ததுடன், அது கடந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் சற்று வலுவிழந்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: