You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை - தேதி, நேரம் , இடம் வெளியீடு
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக இந்த ஆண்டு துபாயில் நடக்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
46 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் கடைசி போட்டி, நவம்பர் 3ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக முதலில் தள்ளிவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள், பின்பு துபாயில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட எட்டு அணிகளும் கடந்த மாதம் துபாயை சென்றடைந்தன. கடந்த ஒரு வாரமாக, அனைத்து அணி வீரர்களும் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அனைத்து போட்டிகளும் அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறுமென்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, நாளின் முதல் போட்டிகள் இந்திய நேரப்படி, மதியம் 3:30 மணிக்கும், மாலைநேர போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி, 7:30 மணிக்கும் தொடங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- இந்திய அளவில் 14ஆம் இடம்: தொழில் வளர்ச்சியை இழக்கிறதா தமிழகம்?
- தமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம், பரதநாட்டியமாக மாறியது எப்படி? #தமிழர் பெருமை
- இந்தியாவுக்குள் ஊடுருவிய இலங்கை காவலர் - சுற்றிவளைத்தது தமிழக காவல்துறை
- PUBG செயலிக்கு பதிலாக களத்தில் குதிக்கும் அக்ஷய் குமாரின் FAU- G இதன் சிறப்பு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: