செளரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு - என்று வருகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

செளரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் இந்திய கேப்டனான செளரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிசிசிஐ தலைவரான ராஜீவ் சுக்லா இது குறித்துக் கூறுகையில், செளரவ் கங்குலியை பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதிகாரப்பூர்வமான இறுதி அறிவிப்பு 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு விண்ணப்பம் தாக்கல் செய்த செளரவ் கங்குலி, ''இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் ஒரு பதவியிலிருந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவது மிகவும் திருப்திகரமாக இருக்கும். அடுத்த சில மாதங்களில், இந்திய கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் சரிசெய்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

முன்னதாக பிரிஜேஷ் பட்டேல், சௌரவ் கங்குலி ஆகிய இருவரது பெயர்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இரண்டு வெவ்வேறு பிரிவினர் ஆதரிக்கின்றனர் என்றும், கங்குலிக்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் ஆதரவு தெரிவிப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.

47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பதவி வகிக்கிறார்.

செளரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக பிசிசிஐ தலைவராகப் போட்டியிடுவது குறித்துப் பேசிய செளரவ் கங்குலி கூறுகையில், "போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பாக இருப்பதால் பொறுப்பு இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாக இருக்கிறது, எனவே இது ஒரு சவாலாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

''நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்குத் தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த அமைப்பிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை துடைக்க இந்த நேரத்தில் ஏதாவது செய்ய எனக்குக் கிடைத்து இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. நல்ல நிலையில் இல்லாத நேரத்தில் நான் பொறுப்பேற்கிறேன்'' என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :