மோதி - ஷி பேச்சுவார்த்தை: இந்தியா சொன்னதையே பிரதிபலிக்கும் சீன அறிக்கை

மோடி

பட மூலாதாரம், PIB_INDIA

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இடையிலான சந்திப்பு கடந்த அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என இந்தியத் தரப்பு ஏற்கனவே விளக்கியிருந்தது. தற்போது சீன துணை வெளியுறவுத் துறை அமைச்சர் லுவோ ஜாவ் குவேய் இருநாட்டு பிரதமர்களின் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என விளக்கியுள்ளார்.

அவர் தெரிவித்தவை பின்வருமாறு:

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் மோதி ஆகியோரின் முதல் முறைசாரா சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானங்கள் மீண்டும் உறுதி செய்யப்பட்டன.

நாட்டு நிர்வாகம் குறித்த விஷயங்களில் தகவல் தொடர்பை மேம்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது, இரு நாடுகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று உதவும் வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

விதிகளை அடிப்படையாகக் கொண்ட பன்முக வர்த்தக முறைக்கு அதரவளித்து வலிமைப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து நாடுகளுக்கும் நன்மை பயக்கும் விதமாக, இருநாடுகளும், திறந்த மற்றும் உள்ளடக்கிய வர்த்தகத்துக்கு பணியாற்றுவது என்றும் பேசப்பட்டது.

இரு தரப்புக்கும் பயனளிக்கும் விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுறவு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிப்பதன் முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர் என இந்தியத் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2020ஆம் ஆண்டில் சீன இந்திய கலாசார பறிமாற்றங்கள் நடைபெறும், இந்திய சீன ராஜீய உறவின் 70ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 70 நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று சீனத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலேவும் தெரிவித்திருந்தார். இதில் 35 நிகழ்ச்சிகள் சீனாவிலும், மீதி 35 நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் நடக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே உயர்மட்ட பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதுவே சீனா தரப்பில் இந்தியா- சீனா வணிக உறவில் நிலவும் வணிகப் பற்றாக்குறை, அதாவது சீனா செய்யும் ஏற்றுமதியின் அளவு அதிகமாகவும், இந்தியா செய்யும் ஏற்றுமதியின் அளவு குறைவாகவும் இருப்பது, பற்றி பேசப்பட்டதாகவும் விஜய் கோகலே கூறினார்.

விஜய் கோகலே

பட மூலாதாரம், ARUN SANKAR

மாமல்லபுரத்துக்கும் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையிலான உறவு குறித்து ஆராய ஒரு கல்வி நிறுவனம் அமைக்கப்படும். ஏற்கனவே இந்தியாவின் அஜந்தா - சீனாவின் துன்ஹுவாங் இடையே இது போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று இந்தியத்தரப்பில் கூறப்பட்டிருந்தது.

பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான நிலவும் விரிவான தொடர்புகளை கணக்கில் கொண்டு கடல்சார் தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலும், சந்திப்பு முடிந்த உடன் சந்திப்பில் என்ன நடந்தது என்பது தொடர்பாக இந்தியத் தரப்பு தெரிவித்த தகவல்களை உறுதி செய்யும் வகையிலேயே சீனாவின் அறிக்கையும் அமைந்துள்ளது.

Presentational grey line

Chennai மாமல்லபுரம் மீனவ குப்பம் டூ ஆஸ்கர் - சிறுமி கமலியை உங்களுக்கு தெரியுமா? | Kamali | Skateboarder girl

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :