2018 கால்பந்து உலகக்கோப்பை: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

    • எழுதியவர், ஸ்டீஃபன் ஷெமில்ட்
    • பதவி, பிபிசி ஸ்போர்ட்

ஜூன் 14 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடங்கியுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.

World Cup winner

பட மூலாதாரம், BBC Sport

கடந்த காலங்களில் நடந்த தொடர்கள், புள்ளி விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் 31 அணிகளை முந்தி கோப்பையை வெல்லப்போகும் அணியைக் கணிக்கிறது பிபிசி.

2018 World Cup

தரவரிசையில் முதல் 8 அணிகள்

மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் வகையில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் 1998இல் மாற்றப்பட்டதிலிருந்து தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளே கோப்பையை வென்றுள்ளன.

2018 World Cup

ஆனால் முதல் எட்டு இடங்களில் இல்லாமல் உலகக் கோப்பை தொடருக்குள் நுழைந்து கடைசியாக ஒரு அணி கோப்பையை வென்ற நிகழ்வு 1986இல் அர்ஜென்டினா வென்றபோதுதான் நடந்தது . அந்தத் தொடரில்தான் புகழ்பெற்ற 'கடவுளின் கை' கோலை மரடோனா அடித்திருந்தார்.

இதன் அடிப்படையில் 24 அணிகளை நீக்கி விட்டால் நம்மிடம் எஞ்சி இருப்பது இந்த எட்டு அணிகள் மட்டுமே.

போட்டி நடத்தும் நாடு

போட்டி நடத்தும் நாடு தகுதிச் சுற்றில் விளையாடாமலே நேரடியாக உலகக்கோப்பையில் பங்கேற்கும் 44 ஆண்டுகால வழக்கத்தால் ரஷ்யா தகுதி பெற்றுள்ளது.

2018 World Cup

இல்லாவிட்டால் தரவரிசையில் 66ஆம் இடத்தில் இருக்கும் ரஷ்யா, முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகளைப் போல தகுதிச் சுற்றில் பங்கேற்காமலேயே விளையாடத் தகுதி பெற்றிருக்க முடியாது.

1930 முதல் 1978 வரை நடந்த முதல் 11 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், போட்டிகளை நடத்திய நாடுகள் ஐந்து முறை கோப்பையைக் கைப்பற்றின.

கடைசி ஒன்பது தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே போட்டி நடத்திய நாடு கோப்பையை வென்றுள்ளது. அது 1998இல் பிரான்ஸ் வென்றபோது நிகழ்ந்தது. ஆகவே ரஷ்யாவை இங்கே தவிர்த்துவிடலாம்.

எதிரணி எத்தனை கோல்கள்?

உலகக்கோப்பையில் 32 அணிகள் விளையாடத் தொடங்கியபின், கோப்பையை வென்ற 5 அணிகளும் தாங்கள் விளையாடிய ஏழு போட்டிகளிலும் எதிரணியை அதிகபட்சமாக நான்கு கோல்களுக்கு மேல் அடிக்க விடவில்லை.

2018 World Cup

மீதமுள்ள ஏழு அணிகளில், தகுதிச் சுற்றில் தாங்கள் வென்ற அணியை சராசரியாக ஒரு போட்டிக்கு 1.4 கோல் அடிக்க விட்டுள்ளது போலந்து அணி.

ஜெர்மனி மற்றும் போர்ச்சுகல் அணிகள் 0.4 கோல், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் 0.6 கோல். பிரேசில் 0.61 கோல் மற்றும் அர்ஜென்டினா 0.88 கோல் ஆகியன எதிரணிகளை ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக அடிக்க விட்டுள்ளன. ஆகவே போலந்தை இதன் அடிப்படையில் தவிர்த்துவிடலாம்.

ஐரோப்பிய நாடுகளின் அணி

உலகோப்பையை வென்ற அணிகள் ஐரோப்பா மற்றும் தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தே வந்துள்ளன.

2018 World Cup

ஐரோப்பிய கண்டத்தில் நடந்த போட்டிகளில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே வென்றுள்ளன. இதுவரை ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ள 10 உலகக்கோப்பை கால்பந்து தொடர்களில் ஒன்பதில் ஐரோப்பிய நாடுகளே வென்றுள்ளன.

1958இல் சுவீடனில் நடந்த தொடரில் தென்னமெரிக்க நாடான பிரேசில் வென்றது.

சிறந்த கோல்கீப்பர்

உலகக்கோப்பையை வெல்வதில் கோல் கீப்பர்களுக்கு முக்கியப் பங்குள்ளது. கடந்த ஐந்து உலகக்கோப்பைத் தொடர்களில் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை வென்றவர்களில் நால்வர் கோப்பையை வென்ற அணிகளைச் சேர்ந்தவர்கள்.

2018 World Cup

இந்த முறை ஜெர்மனியின் மனுவில் நூயர், பிரான்சின் ஹியூகோ லோரிஸ் அல்லது பெல்ஜியத்தின் திபாட் கோர்ட்டிஸ் ஆகியோரில் ஒருவர் இந்த விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்ச்சுகலின் ருய் பாட்ரிசியோ சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

அனுபவம் மிக்க வீரர்கள்

உலககோப்பையை வெல்லும் அணிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர்களைக் கொண்டுள்ள அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாகிறது.

1998இல் வென்ற பிரான்ஸ் அணியின் வீரர்கள் சராசரியாக ஒருவர் 22.77 போட்டிகளில் விளையாடியிருந்தார். அதற்கு முன்பு வென்ற ஜெர்மன் அணியில் ஒரு வீரர் சராசரியாக விளையாடியிருந்த போட்டிகளின் எண்ணிக்கை 42.21.

2018 World Cup

2002இல் வென்ற பிரேசில், 2006இல் வென்ற இத்தாலி, 2010இல் வென்ற ஸ்பெயின் ஆகிய அணிகளின் வீரர்கள் சராசரியாக முறையே 28.04, 32.91 மற்றும் 38.30 போட்டிகளில் பங்கேற்றிருந்தனர். இங்கே மீதமுள்ள மூன்று அணிகளில் பிரான்ஸ் அணி வீரர்கள் சராசரியாக விளையாடியாக போட்டிகள் 24.56. இதுவே ஜெர்மனிக்கு 43.26 ஆகவும் பெல்ஜியத்திற்கு 45.13 ஆகவும் உள்ளது.

பட்டத்தை தக்கவைத்து கொள்ள வாய்ப்பு குறைவு

1958 மற்றும் 1962இல் பிரேசில் தொடர்ச்சியாக இருமுறை உலகக்கோப்பையை வென்றதன் பின் எந்த அணியும் தொடர்ச்சியாக இரு உலககோப்பைத் தொடர்களில் வென்றதில்லை.

அதன் பின்னர் நடந்த 13 தொடர்களில் கோப்பையை வென்ற நாடுகளில் 1990இல் அர்ஜென்டினா மற்றும் 1998இல் தவிர எந்த அணியும் காலிறுதிக்கே செல்லவில்லை.

ஜெர்மனி அணியின் உலக்கோப்பை வரலாறு மிகவும் நன்றாகவே உள்ளது.

ஜெர்மனி கடந்த ஒன்பது தொடர்களில் இரண்டில் வென்றுள்ளது. அதுமட்டுமல்லாது மூன்று முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. இருமுறை மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

ஆனால், இந்த உலககோப்பைத் தொடரைப் பொறுத்தவரை வரலாறு ஜெர்மனிக்கு எதிராகவே உள்ளது.

2018 World Cup

ஆக, பெல்ஜியம் அணி இந்த முறை கால்பந்து உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பே அதிகம். எனினும், வேறு அணி வெல்வதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறிவிட முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :