சர்வதேச கால்பந்து: மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி
இந்திய கால்பந்து அணித் தலைவரும் பிரபல கால்பந்து நட்சத்திரமுமான சுனில் சேத்ரி கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

பட மூலாதாரம், Matthew Ashton - AMA
கென்யா, சைனீஸ் தய்பய், நியூசிலாந்து, ஆகிய நான்கு அணிகளும் இக்கோப்பைக்காக மோதின. மும்பையின் அந்தேரி கால்பந்து மைதானத்தில் ஜூன் 1 - ஜூன் 10 வரை இந்த தொடர் போட்டிகள் நடந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இறுதிப்போட்டியில் சுனில் சேத்ரி அடித்த கோல்களின் உதவியால் கென்யாவை 2-0 என வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி.
சர்வதேச கால்பந்தில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் ரொனால்டோ 150 போட்டிகளில் 81 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். சுனில் சேத்ரி மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
சுனில் சேத்ரி 101 போட்டிகளில் 64 கோல்கள் அடித்துள்ளார். லியோனல் மெஸ்ஸி 124 போட்டிகளில் 64 கோல்கள் அடித்துள்ளார்.
இதுவரை அதிக சர்வதேச கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரானைச் சேர்ந்த அலி டேய் 149 போட்டிகளில் 109 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றாவது இடத்தில் உள்ளார். பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே ஏழாவது இடத்திலும் சுனில் சேத்ரி மற்றும் லியோனல் மெஸ்ஸி 21-வது இடத்திலும் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியில் எட்டாவது மற்றும் 29-வது நிமிடங்களில் சுனில் சேத்ரி கோல் அடித்தார்.
சுனில் சேத்ரியை தவிர இந்தியாவுக்காக நூறு சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் பாய்சங் பூட்டியா.

பட மூலாதாரம், Hindustan Times
கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கோப்பைத் தொடரில் முதல் போட்டியில் சைனீஸ் தய்பய் அணியை 33 வயது சுனில் சேத்ரி அடித்த மூன்று கோல்கள் உதவியுடன் 5-0 என வீழ்த்தியது இந்திய அணி. அப்போட்டியில் விளையாட்டு அரங்கிற்கு 2,569 ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியாவில் உலகின் மிகப் பிரபலமான கால்பந்து விளையாட்டில் இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச போட்டியொன்றில் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கவலையை ஏற்படுத்தியதாக பலரும் சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்தனர்.
விளையாட்டு அரங்கிற்கு வந்த ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சுனில் சேத்ரி ஒரு காணொளியை ட்விட்டரில் வெளியிட்டார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
அதில் ''கால்பந்துக்கு ரசிகர் அல்லாதவர்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நீங்கள் மைதானத்துக்கு வர வேண்டும். அதற்கு இரு காரணங்கள் உள்ளன. கால்பந்துதான் உலகில் சிறந்த விளையாட்டு என்பது ஒரு காரணம்; மற்றொன்று நாங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம்'' என்றார் இந்திய கால்பந்து அணித் தலைவர்.
சுனில் சேத்ரிக்கு இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆதரவளித்தனர்.
அடுத்தடுத்த போட்டிகளில் ரசிகர்கள் மைதான அரங்கின் அனைத்து இருக்கைகளையும் நிரப்பத் துவங்கினர்.
2007,2011,2013 மற்றும் 2014 ஆண்டுகளில் அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் 'பிளேயர் ஆஃப் தி இயர்' எனும் விருதுக்கு சுனில் சேத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிற செய்திகள்:
- சிங்கப்பூர் உச்சிமாநாடு: கிம்மை தொடர்ந்து டிரம்பும் வருகை
- சர்வதேச கால்பந்தில் மாரடோனா அடித்த கடைசி கோல்
- ரஃபேல் நடால் - ஃபிரென்ச் ஓபன் : தொடரும் காதல்கதை
- பிரிட்டன் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த முதல் சிப்பாய்
- "அடுத்து நான் பாலா படத்தில் நடிக்கிறேன்": 'காலா' ஈஸ்வரி ராவுடன் பிரத்யேக நேர்காணல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












