செவ்வாய் கிரகத்தில் நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தின் மலைமுகடுகள், பள்ளத்தாக்குகளில் "நீரோட்டம்" காணப்படுவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை

பட மூலாதாரம், Nasa

படக்குறிப்பு, செவ்வாய் கிரகத்தின் மலைமுகடுகள், பள்ளத்தாக்குகளில் "நீரோட்டம்" காணப்படுவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

செவ்வாய் கிரகத்தின் "நீர் வீழ்ச்சி"யா?

பட மூலாதாரம், Nasa

படக்குறிப்பு, செவ்வாய் கிரகத்தின் "நீர் வீழ்ச்சி"யா?

இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் "நீரோட்டத்தை" காட்டும் மற்றும் ஒரு புகைப்படம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, செவ்வாய் கிரகத்தின் "நீரோட்டத்தை" காட்டும் மற்றும் ஒரு புகைப்படம்

வாஷிங்க்டனில் இன்று திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்த தகவல்களை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.

செவ்வாய் கிரகத்தின் "மலையறுவி"யா"?
படக்குறிப்பு, செவ்வாய் கிரகத்தின் "மலையறுவி"யா"?

உப்புகளில் பலவகை உண்டு என்றும், அவரை கரைந்து நீராக ஓடுவதற்கான சுழலை உருவாக்குவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கினர்.

"நீரை"ச் சுமந்து நிற்கிறதா செவ்வாய் கிரகம்?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, "நீரை"ச் சுமந்து நிற்கிறதா செவ்வாய் கிரகம்?

செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதானது, அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்கிறது.

மலையும், அருவியும் பூமிக்கு மட்டும் சொந்தமல்ல என்கிறதா செவ்வாய் கிரகக் கண்டுபிடிப்பு?
படக்குறிப்பு, மலையும், அருவியும் பூமிக்கு மட்டும் சொந்தமல்ல என்கிறதா செவ்வாய் கிரகக் கண்டுபிடிப்பு?

மேலும் செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டையும் சிறிதளவுக்கு இது அதிகப்படுத்தியிருக்கிறது.