'விவாகரத்தானவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக வரும்'
திருமண உறவில் தொடர்பவர்களை விட விவாகரத்து செய்து கொண்டவர்களுக்கே அதிகமாக மாரடைப்பு வருவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.

15,827 பேரிடம் செய்த ஆய்வுகளின்படி, பெண்களே இதனால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாகவும், மறுமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு ஆபத்து குறைவதாகவும் கூறப்படுகிறது.
சர்குலேஷன் என்னும் சஞ்சிகையில் வந்துள்ள இந்த ஆய்வு பற்றிய தகவல்களில், விவாகரத்தால் வரக்கூடிய நீடித்த மன அழுத்தம், மனித உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
மாரடைப்புக்கான பெரிய காரணமாக விவாகரத்தை பட்டியலிடுவதற்கு முன்னதாக, அது குறித்து மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கூறியுள்ளது.
நெருக்கமானவர்களின் மரணம் மாரடைப்பை அதிகரிக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.








