நீந்தும் டைனோசர் வகை கண்டுபிடிப்பு - காணொளி
சஹாரா பாலைவனத்தில் பூமிக்கு அடியில் புதையுண்டிருந்த ஒன்பதரைகோடி ஆண்டுகள் பழமையான ஸ்பைனோசர் என்ற டைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன.
ஸ்பைனோசர் இதுவரை அறியப்பட்டதில் மிகப் பெரிய மாமிச பட்சிணியாகும்.
துடுப்பு போன்ற தட்டையான பாதங்களும், முதலையைப் போல முக அமைப்பையும் நீருக்குள் முழுகியபடி இருக்க ஸ்பைனோசர்களுக்கு கை கொடுத்துள்ளது.
தற்போது சஹாரா பாலைவனத்தில் எடுக்கப்பட்டுள்ள எலும்புக் கூடு 7 ஆடி நீளமுள்ளது.

பட மூலாதாரம், BBC World Service
இதன் உடல் அமைப்பு தரையில் பயணித்த பிற டைனோசர்களைப் போல இல்லை என்றும், அதனால் இந்த வகை விலங்குகள் தங்கள் வாழ்நாளில் கணிசமான பகுதியை நீருக்குள் செலவிட்டிருக்கலாம் என்று தாம் எண்ணுவதாகவும் இந்த ஆய்வை வழிநடத்திய சிகாகோ பல்கலைக் கழகத்தின் நிசர் இப்ரஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த வகை டைனோசர்கள் தலை முதல் வால்நுனி வரை கணக்கிடுகையில் 50 அடி நீளம் வரை வளரக் கூடியவை. டிரெக்ஸ் வகை டைனோசர்களை விட இவை அளவில் பெரியவை. இவற்றுக்கு நீந்தும் திறன் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகித்து வந்திருந்தாலும் – இப்போது கிடைத்த இந்த புதை படிம எலும்புக் கூடு இவை நீந்தின என்பதை உறுதிப்படுத்த உதவியுள்ளது.








