சமூக ஊடகத்தில் ஆரோக்கிய 'டிப்ஸ்' தேடுபவரா நீங்கள்? - இந்த 5 விஷயங்களை கவனியுங்கள்

உணவு - சமூக ஊடகம்

சமூக ஊடகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் ஊட்டச்சத்து பற்றி கூறும் அறிவுரைகள் பலரும் கேட்பதும், அதை முயற்சி செய்து பார்ப்பதும் பொதுவான ஒரு விஷயமாக உள்ளது.

இது போன்ற தளங்கள் உடல்நலம் பற்றின பயனுள்ள தகவல்களை பரிமாறிக் கொள்வது நேர்மறையான விஷயமாக உணவியல் வல்லுநர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் கருதுகிறார்கள். ஆயினும், இணையத்தில் போலியான தகவல்கள் பரவலாக பகிரப்படும் நிலையில் சில எளிய வழிகள் மூலம் சரியான தகவல்களையும், தவறான தகவல்களையும் நாம் கண்டறியலாம்.

பின்வரும் ஐந்து விஷயங்களை கவனித்தால், இதனை கண்டறியலாம்.

1. ஒருவருடைய கதை மட்டும் உதாரணமாக காட்டப்பட்டதா?

ஆரோக்கியத்தைப் பற்றி ஆதாரங்களை விட தனிப்பட்ட நபர்களின் கதைகள் மக்களை வெகுவாக ஈர்க்கும் என்கிறார் உணவியல் நிபுணரான கத்ரீன் ராபெஸ். இணையத்தில் ஆரோக்கியம் குறித்து இது போன்ற கதைகள் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லாமல் பகிரப்பட்டால், கவனமாக இருங்கள். ஏனென்றால், பெரும்பாலும் இத்தகைய கதைகளுக்கு எந்த அறிவியல் ரீதியான ஆதாரங்களும் இருக்காது. அதனால், அது மற்றவர்களுக்கு பொருந்தாது என்கிறார்.

எல்லாரும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை தேர்வு செய்தால், தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் தொடர்புப்படுத்தி சில அறிவுரைகள் பின்பற்றினால், எல்லாரும் அதே போன்ற பயனைப் பெறலாம் என்ற பாணியில் அந்த கதை இருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். "உங்கள் மரபியலை தாண்டி நீங்கள் உணவு, உடற்பயிற்சி மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியாது," என்று ஊட்டச்சத்து நிபுணர் பிக்சி டர்னர் கூறுகிறார்.

சமூக ஊடகம் கற்றலுக்கும் ஆதரவு அளிப்பதற்கும் ஒரு நேர்மறையான இடத்தை உருவாக்க முடியும் என்றாலும், மற்றவர்களுடன் நீங்கள் உங்களை ஒப்பிட்டு பார்ப்பது குறித்து அவர் எச்சரிக்கிறார்.

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது ஊட்டச்சத்து ஆலோசனை தேவைப்பட்டால், அதை மருத்துவ நிபுணரிடம்தான் கேட்க வேண்டும்.

உணவு - சமூக ஊடகம்

பட மூலாதாரம், Getty Images

2. ஆலோசனை வழங்குபவர் ஏதோ ஒரு தயாரிப்பை விற்கிறாரா?

சமூக ஊடகங்களில் ஸ்பான்சர் செய்யப்பட்ட இடுகைகள் பொதுவாக உள்ளன. ஒருவர் ஒரு விஷயத்திற்காக பணம் வாங்கும்போது, ஒரு சார்புடையவர்களாக ஆகிவிடுகிறார். இதனால், சமூக ஊடகத்தில் ஒருவர் ஒரு தயாரிப்பு பாதுகாப்பானதா இல்லையா என்ற சிந்தனை இல்லாமல் விளம்பரப்படுத்தினால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர் சோஃபி மெட்லின் சுட்டிக்காட்டுகிறார்.

சமூக ஊடகத்தில், ஒருவர் ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்தினால், அதை அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று பிரிட்டனின் அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டி (ஏ.எஸ். ஏ - விளம்பர தரநிலை ஆணையம்) கூறுகிறது. ஆனால், சமூக ஊடகத்தில் செல்வாக்கான (influencers) நபர்கள் சிலர் சில டயட் தயாரிப்புகளை பயன்படுத்தாமலேயே தங்கள் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஒப்புக்கொண்டதாக பிபிசி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏ.எஸ். ஏவுக் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகப் பயனர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று மெட்லின் நம்புகிறார். அவரும் உணவியல் நிபுணர் ஹலா எல்-ஷாஃபியும் சமூக ஊடகங்களில் எதை விளம்பரப்படுத்தலாம், யார் சுகாதார ஆலோசனைகளை வழங்கலாம் என்பதற்கான கூடுதல் கட்டுப்பாடுகளுக்காக விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.

"பசியை அடக்கும் மருந்துகள், உணவுக்கு பதிலாக இருக்கும் உணவு மாத்திரைகள், தேநீர், ஊசி மூலம் எடை குறைக்கும் மருந்துகள் போன்ற ஆபத்தான உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்துகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தயாரிப்புகளை ஊக்குவிப்பவர்களைத் தடுப்பதற்கான விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று மெட்லின் வலியுறுத்துகிறது.

3. அறிவியலில் விளக்கமில்லாத வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறதா?

'டிடாக்சிங்' (detoxing) மற்றும் 'க்ளென்சிங்' ('cleansing') போன்ற ஆங்கில சொற்களைநீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அவை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வார்த்தைகள் 'அவற்றைப் பயன்படுத்தும் நபர்களால் வரையறுக்கப்படுகின்றன' என்று டர்னர் கூறுகிறார். ஒரு பொருளைச் சந்தைப்படுத்தப் பயன்படுத்தும்போது , அவற்றுக்கான அறிவியல் வரையறை இல்லை.

உணவு - சமூக ஊடகம்

பட மூலாதாரம், Instagram / @pixienutrition

'டிடாக்ஸ்' என்ற வார்த்தையை யாராவது பயன்படுத்தினால், "மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதற்கான வலுவான ஆதாரம் அது" என்று டர்னர் கூறுகிறார். "இத்தகைய பணிகளை உங்கள் உடலில் செய்ய உங்களிடம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளன. நீங்கள் உண்ணும் உணவுகள் நச்சுத்தன்மையற்றவை. இல்லையெனில், நீங்கள் இறந்து இருப்பீர்கள் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டிப்பீர்கள்," என்று மெட்லின் நமக்கு உறுதியளிக்கிறார்.

'சூப்பர்ஃபுட்' என்ற வார்த்தை அறிவியல் வரையறை இல்லாத மற்றொரு பொதுவான மார்க்கெட்டிங் வார்த்தையாகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழைப்பழங்கள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட பிரசார வார்த்தை என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. 'சூப்பர்ஃபுட்ஸ்' என்பது பெரும்பாலும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது என்று பொருள். இங்கிலாந்து தரத்தின்படி 'கவர்ச்சியான' அல்லது மிகவும் விலை உயர்ந்தது", டர்னர் குறிப்பிடுகிறார்.

4. மருத்துவக் காரணமின்றி உணவு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறதா?

பலர் சில வகையான உணவுகளை குறைக்க பரிந்துரைக்கின்றனர். ஆனால் நீங்கள் இதைச் செய்தால் இழந்த ஊட்டச்சத்துக்களை மற்ற உணவுகளில் பெறுவது அவசியம்.

"கார்போஹைட்ரேட்டுகள் சில சமயங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் அவற்றை முற்றிலும் புறக்கணிப்பது நாள்பட்ட சோர்வுக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவை நம் உடலுக்கு குளுக்கோஸை வழங்குகின்றன. இது உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் செயல்பட உதவும் ஒன்று," என்று ராபெஸ் எச்சரிக்கிறார்.

உணவு - சமூக ஊடகம்

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் பால் சார்ந்த உணவுகளை புறக்கணித்தால், அதற்கு மாற்றாக கால்சியம் கொண்ட உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள் என்று மெட்லின் கூறுகிறார்.

உணவுகளில் 'நல்லது' அல்லது 'கெட்டது' என முத்திரை குத்துவதில், உளவியல் ரீதியான ஆபத்துகளும் உள்ளன என்று டர்னர் எச்சரிக்கிறார். ஏனெனில் இது "உங்களை ஒரு நல்லவராகவோ கெட்டவராகவோ பார்க்க வழிவகுக்கிறது என்றார். உணவைச் சுற்றியுள்ள கட்டுப்பாட்டை மீறும் உணர்வையும், மனச்சோர்வு, உடல் தோற்றம் பற்றி கவலை ஆகியவற்றுக்கு இந்த சிந்தனை வழிவகுக்கும். நிச்சயமாக, சில உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது நல்ல விஷயம். ஆனால் சமச்சீரான உணவைப் பழக்கத்தை பின்பற்றுவதே முக்கியம்.

5. அனைத்தையும் குணப்படுத்தும் ஒன்றாக கட்டப்படுகிறதா?

நமது வாழ்க்கை முறையை மாற்றாமல் எந்த ஒரு 'சிக்கலை' தீர்க்கும் ஒரு மாய தயாரிப்பை ஊக்குவிக்கும் உணவுகளை தவிர்க்குமாறு பிரிட்டிஷ் உணவுக் கூட்டமைப்பு அறிவுறுத்துகிறது.

உணவு - சமூக ஊடகம்

பட மூலாதாரம், Getty Images

"அனைத்தையும் சரிசெய்யும் ஒரு மருந்து இருந்தால், நாம் அனைவரும் அதைப் பயன்படுத்திக்கொண்டு இருப்போம். நீங்கள் மாத்திரை வடிவில் எடுக்கும் எதுவும் ஒட்டுமொத்த ஆரோக்கியமற்ற உணவு, மன அழுத்தம் மற்றும் போதுமான உடற்பயிற்சியை எடுக்காமல் இருப்பதை சரி செய்வதற்கான மாற்றாக இருக்க முடியாது. உங்கள் பணத்தை மருந்தகத்தை விட பழங்கள் மற்றும் காய்கறி வாங்குவதில் செலவிடுங்கள்," என்று மெட்லின் கூறுகிறார்.

5. ஊட்டச்சத்து ஆலோசனைக்கு நாம் யாரைப் பார்க்க வேண்டும்?

உணவியல் நிபுணர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்களைப் பார்க்க வேண்டும். சமூக ஊடகத்தில் செல்வாக்கு மிக்க நபர்கள் போல் இல்லாமல் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்குப் பொறுப்பேற்கிறார்கள். "ஊட்டச்சத்து படிப்பில் பட்டம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுவது அவர்கள் கொடுக்கும் தகவல் ஆதாரத்தின் அடிப்படையில் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. அவர்கள் பரிந்துரைப்பதற்கு அவர்கள் பொறுப்பேற்கிறார்கள்," என்று எல்-ஷாஃபி முடிக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: