மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்? - தொடுதல் மனித வாழ்வுக்கு ஏன் அவசியம்?

human touch 1

பட மூலாதாரம், Getty Images

 மனிதர்கள் நலமுடன் இருக்க தொடுதல் அடிப்படையான ஒன்று. ஆனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொட முடியாமல் போனால், அவர்களுக்கு என்ன நடக்கும்? விளக்குகிறார்கள் நிபுணர்கள்.

மனிதர்களுக்கு இடையே தொடுதல் மிகவும் முக்கியமானது. இது சமூகத்தை ஒன்றிணைக்கும் பிணைப்பு என்று "யுனிக்: தி நியூ சயின்ஸ் ஆஃப் ஹுமன் ஆஃப் இண்டிவிஜுவலிடி (Unique: The NewScience of Human Individuality) என்ற புத்தக்கத்தின் எழுத்தாளர் டெவிட் லிண்டேன் கூறுகிறார்.

சமூகத்துடன் நாம் பழகும் போது, தொடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் மிகவும் குறைவாக மதிப்பிடுகிறோம். நாம் உயிர் வாழ மனிதத் தொடுதல் மிகவும் முக்கியமானது. அது நம் டி.என்.ஏவில் உள்ளது.

தொடுதல் குறித்த மிகவும் குறைவாகவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொடுகை குறித்து வெறும் 100 பக்கங்கள் கொண்ட ஆய்வே அனைவருக்குமாக இருக்கிறது. தொடுதலை நாம் மிகவும் சுலபமாக எடுத்துக் கொள்கிறோம் என்று பரிணாம வளர்ச்சி குறித்த உளவியலாளர் ராபின் டன்பர் கூறுகிறார்.

தொடுதல் நமது தோலின் மூலமாகவே உணரப்படுகிறது. ஆனால், நாம் பிறரை தொடும்போது, என்ன நடக்கும்? ஏன் அது மிகவும் தனித்துவம் வாய்ந்தது? என்ற கேள்வியுடன் தொடர்கிறார் சைக்கோடைனமிக் நியூரோ சயின்ஸ் பேராசிரியர் ( Professor of Psychodynamic Neuroscience) கேடரினா ஃபோட்டோலூலோ (KATERINA FOTOLOULOU ).

"பிறரை தொடுவது என்பது, மூளையின் வெவ்வேறு செயல்பாடுகளால் இயக்கப்படுகிறது. 1990-களில்தான், மனிதர்களின் தோலில் பிரத்யேகமான செல்களின் தொகுப்பு உள்ளது. அது தனித்துவமான பாதைகளுக்கு பயணித்து சென்று, மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கின்றது. இந்த செயல்முறைக்கு C-Tactile System என்று அழைக்கப்படுகிறது.", என்று அவர் கூறுகிறார்.

தொடுதல் என்பது நம் இயல்பிலேயெ இருக்கும் ஒன்று. மனித இனத்திற்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் விழித்திருக்கும்போது, தங்கள் ரோமங்களை தூய்மைப்படுத்தி கொள்ளுதலில், 10-20% நேரத்தை செலவழித்தன. ஆனால், மனிதர்களுக்கு தற்போது ரோமங்கள் (Fur) இல்லை. ஆனால், தொடுதலை பொருத்தவரையில், முந்தைய உயிரினங்களுடன் மனிதர்களுக்கு நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

 நம் உடலில் ரோமங்களை கைகளிலிருந்து பிரித்து காட்டும் பகுதி, மூளைக்கு இவ்வாறு சமிக்ஞையை அனுப்புகிறது, "நீங்கள் இங்கே உங்கள் சிறந்த நண்பருக்கு அருகில் இருக்கிறீர்கள்." இது மூளையில் என்ன செய்கிறது எனில், எண்டோர்பின் அமைப்பைத் தூண்டுகிறது. நாம் மிகவும் அமைதியாக உணர்கிறோம். மேலும், குறிப்பாக, இந்தச் செயலைச் செய்யும் நபர் மீது நம்பிக்கை வைக்கிறோம். அதுவே இந்த நட்பின் உணர்வை உருவாக்குகிறது.

மனிதர்களின் கையில் இருக்கும் ரோமப்பகுதி, தடவி கொடுப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.

human touch 2

பட மூலாதாரம், Getty Images

"அரவணைப்பு சிகிச்சையில் கட்டிப்பிடித்தல், தடவி கொடுத்தல், அனைத்து வகையான பிளாட்டோனிக் தொடுதல்கள் (Platonic touch) ஆகியவை அடங்கும். இது மிகவும் எளிமையான நடைமுறை. ஆனால், இது உண்மையில் மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்", என்று கூறுகிறார் (Hug Therapist) அரவணைப்பு சிகிச்சையாளராக உள்ள ரெபெக்கா மிக்கோலா.

தொடுதல் நம் வாழ்வை மேம்படுத்துகிறது மற்றும் வலி நிவாரணியாகக் கூட செயல்பட முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடுதல் என்பது ஒரு குழந்தையாக நாம் கற்றுக் கொள்ளும் முதல் உணர்வு. நாம் இவ்வாறே முதலில் தொடர்பு கொள்கிறோம். மேலும் இது ஆரம்பகால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

இதுகுறித்து, குழந்தை நரம்பியல் பேராசிரியரான ரெபெக்கா ஸ்லேட்டர் கூறுகையில், "இது அவர்களின் இதயத் துடிப்பை சீராக்கும். இது அவர்களின் எடையை அதிகரிக்க உதவலாம். இது உண்மையில் சமூக பிணைப்பை உருவாக்கும் முதல் நிகழ்வு", என்று விளக்குகிறார்.

"அதனால்தான், யாரெனும் உங்களைப் பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அவர்கள் உங்களை எப்படித் தொடுகிறார்கள் என்பதை உணருங்கள் என நான் கூறுகிறேன்", என்று ராபின் டன்பர் கூறுகிறார்.

ஆனால், 110க்கும் மேற்பட்டநாடுகளில் கிட்டத்தட்ட 40,000 பேரிடம் நடத்தப்பட்ட தொடுதல் குறித்த ஆய்வு கணக்கெடுப்பின்படி, நம்மில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குபோதுமான தொடுதலைப் பெறவில்லை என்று கூறுகிறார்கள். 

இது தொடுதலின்மை (TOUCH HUNGER) என்ற பிரச்னையாக தீவிரமாக உள்ளது. மேலும் இது நம் பலரைப் பாதிக்கத் தொடங்குகிறது.

"நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக தொடும் நபர்களைத் தொட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உடனடியாக அது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், நமது பிணைப்பு, கருணை, நம்பிக்கை போன்ற உணர்வுகள் மெதுவாக குறையும்.", என்று டேவிட் லிண்டேன் கூறுகிறார்.

human touch 2

பட மூலாதாரம், Getty Images

"நீங்கள் ஒருவிலங்கை தொடுவதை நிறுத்தினால், அவை உண்மையில் நோய்வாய்ப்படும்; அதற்கு பதட்டம் ஏற்படும். மேலும் அவை நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.குறைவான வாழ்நாளே கொண்டிருக்கும்." சமூகத்தில் தொடுதல் பற்றிய கருத்து உண்மையில் மாறிவருகிறது.

"ஊரடங்கின் போது மக்கள் இயற்கையான தொடுதல் இருக்கும் காட்சிகள் உள்ள படங்களை பார்த்தபோது, அவர்கள். "இல்லை, அப்படி செய்யக்கூடாது !" என்று டிவியை நோக்கிப் பேச தொடங்கினர். நாம் எவ்வளவு விரைவாக மாற்றத்தை பழக கற்றுக்கொள்கிறோம் என்பதற்கு இது ஒருநல்ல உதாரணம்", என்று கேடரினாஃபோட்டோலூலோ கூறுகிறார்.

பெருந்தொற்று முன்பு மக்கள் இருந்ததே போல, இப்போது அவர்களை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை.", என்று ரெபெக்கா ஸ்லேட்டர் கூறுகிறார். "தொடுதலின் முக்கியத்துவத்தை நாம் எப்போதாவது இழக்க நேரிடும் என்று நான் காண்கிறேன். பரிணாம வளர்ச்சி என்று வரும்போது, அப்படி ஒரு போதும் நடக்காது என்று சொல்லமுடியாது. ஆனால், காதல் உறவுகளை நாம் கைவிடாத வரை அது சாத்தியமில்லை என்று நான் சந்தேகிக்கிறேன்." என்கிறார் ராபின் டன்பர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: