உடல் நலனும் மன நலமும்: பதற்றமாக இருக்கிறதா? உங்களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள்

Mental Health

பட மூலாதாரம், Getty Images

தேர்வு, காலக்கெடு, பணிக்கான நேர்காணல், ஒன்றை தொகுத்து வழங்குவது போன்ற செயல்பாடுகள் பொதுவாகவே உங்களை மிகவும் பதற்றமாக்கும்.

நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய தருணத்தில், உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம்; உங்கள் உள்ளங்கை வியர்க்கலாம்; உங்கள் குரல் வித்தியாசமாக மாறலாம்; உங்கள் மூளை இருண்டுப்போகலாம்.

நரம்பியல் அறிவியலின் படி, உங்களை நீங்களே இயல்பாக்கிக்கொள்ள மூன்று எளிய, நம்பக்கூடிய உத்திகள் இருக்கின்றன; நீங்கள் எவ்வளவு பதட்டமாக இருந்தாலும், இந்த உத்திகள் உங்களை அமைதியாக்கி, முன்நடத்தி செல்லும்.

மன அழுத்ததை எதிர்கொள்ள நிச்சயமாக வேறு பல உத்திகள் உள்ளன; ஆனால், இந்த மூன்று உத்திகளும் உங்களுக்கு உடனடி தீர்வை தரும்.

மூச்சுப் பயிற்சி

முதலில் மூச்சுப்பயிற்சி - நீங்கள் உங்கள் மூக்கு வழியாக ஐந்து நொடிகள், ஆழமாக, நன்றாக மூச்சை இழுங்கள். அதை ஒரு நொடி பிடித்து வையுங்கள். பின்னர், இழுத்துப் பிடித்திருக்கும் காற்றை உங்கள் மூக்கு வழியாக, ஒன்றிலிருந்து ஐந்து வரை எண்ணிக்கொண்டு, மெதுவாக வெளியில் விடுங்கள். இப்படி சில முறை செய்யுங்கள். நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.

பல நூற்றாண்டுகளாக, நம் உடலின் நரம்பியல் அமைப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, யோகிகளும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மூச்சுப் பயிற்சி உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவியல் புரிந்துக்கொள்ள தொடங்கியுள்ளது.

ப்ரீ-பாட்ஸிங்கர் அமைப்பு (PRE-BOTZINGER COMPLEX) - மன அழுத்தத்துடன் இருக்கும் போது, மிகவும் வேகமாக மூச்சை விடுவோம். அதனால், நம் உடல் ஆபத்தில் இருப்பதற்கு தயாராகும். இது நாம் ஓடி செல்ல உதவலாம். ஆனால், பொதுவெளியில் பேச தயாராகும்போது உதவி செய்யாது.

Mental Health

பட மூலாதாரம், Getty Images

நாம் மூச்சை ஆழமாகவும் மெதுவாகவும் விடும்போது, 'ஆபத்தில்' இருந்து' எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று நம் மூளைக்கு இதன் மூலம் செய்தி சென்றடைகிறது. அதனால், அடுத்த முறை உங்களின் பதட்டம் அதிகரித்தால், உங்கள் மனநிலையை அமைதியாக்க, நீங்கள் ஆழமாக மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், இதை யாரும் கவனிக்க மாட்டார்கள்; நீங்கள் மேடையில் நின்றாலும், பார்ப்பவர்களுக்கு அது தெரியாது.

இப்போது, நீங்கள் இசையை மனதுக்குள்ளேயே பாடத் தயாராகுங்கள். ஒரே ஒரு இசை சுரத்தையோ உங்களுக்கு விருப்பமான இசையையோ என எதை வேண்டுமானாலும் பாடலாம். ஏன் தெரியுமா?

நம் உடலின் பெரிதும் அறியப்படாத மிக முக்கிய பாகமாக 'வேகஸ் நரம்பு' (vagus nerve) உள்ளது. இசையை மனதுக்குள் பாடுவதன் மூலம் இதயத் துடிப்பு சீராகுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி செய்வதற்கு லத்தீன் மொழியில் 'அலைந்து திரிவது' என்று பொருள் தரும். ஏனெனில் இது மூளையில் இருந்து வெளிப்பட்டு, தகவல்தொடர்புக்கான ஒரு துரிதமான பாதை போல உடலில் மேலும் கீழும் வளைந்து, இதயம், நுரையீரல் மற்றும் வயிறு, குரல் பகுதி, காதுகள் போன்ற உறுப்புகளுடன் மூளையை இணைக்கிறது.

2013ஆம் ஆண்டு பாடகர்கள் பற்றிய ஆய்வில், பாடுவது, ஹம்மிங் செய்வது பக்தி மந்திரங்கள் கூறுவது அனைத்தும் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகின்றன என்பதைக் காட்டுகிறது.

அதனால், அடுத்த முறை உங்கள் இதயம் வேகமாக துடிக்கும் போது ஒரு பாடலைப் பாடுங்கள் அல்லது ஒரு பாடல் குறிப்பை முணுமுணுத்து, உங்கள் நாடி நரம்புகளை அமைதியாக்குங்கள்.

Mental Health 1

பட மூலாதாரம், Getty Images

இறுதி உத்தி, கவனம் செலுத்துவது. நீங்கள் பிஸியாக இருக்கும்போது பல பணிகளைச் செய்யத் தோன்றும். ஆனால் நீங்கள் அமைதியாக இருந்து உண்மையில் செய்ய வேண்டியவற்றை முடிக்க வேண்டுமெனில், ஒரே சமயத்தில் பல பணிகளைச் செய்யாதீர்கள். உங்கள் மூளை ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய முடியும் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே

நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்யும் போது, நீங்கள் மிக வேகமாக மாறி மாறி வேலை செய்ய வேண்டும். மேலும், இதனால் ஏற்படும் அதிகப்படியான தூண்டுதலால் உங்கள் உடல் மன அழுத்த ஹார்மோன்களால் நிரப்புகிறது.

உங்கள் மூளையை இணைக்கும் விதத்தில் வேலை செய்வதன் மூலமும், ஒரு நேரத்தில் ஒரு செயலை செய்வதன் மூலம், நீங்கள் சோர்வுற்ற உணர்விலிருந்து விரைவாக அமைதி பெறலாம்.

அதனால், உங்கள் பணியை சிறிய பகுதிகளாகவோ அல்லது படிப்படியாக பிரித்தோ செய்யுங்கள். அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்ற பணிகளை அவற்றின் நேரம் வரும் வரை மறந்து விடுங்கள். இது சில நேரங்களில் 'செயல்முறை சிந்தனை' என்று அழைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த அவர்களின் பயிற்சியாளர்கள் இந்த உத்தியை பயன்படுத்துவார்கள்.

கவனம் செலுத்துவது

உங்கள் முழு கவனத்துடன் ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்வது உங்கள் மனதை ஓர் இடத்தில் வைத்திருக்கும். மேலும் இது ஒரு சிறந்த பழக்கத்தை உருவாக்கும். அடுத்த முறை நீங்கள் பதட்டமாக உணர்ந்தால், கொஞ்சம் சுதாரியுங்கள். மூச்சுப் பயிற்சி செய்யவும், பாடல் முனகவும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவும் நினைவில் வைத்துக் கொள்ளவும். நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: