சூரிய கிரகணம் 2021: உலகின் பல இடங்களில் இருந்து அரிய படங்கள்

சூரிய கிரகணம்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, வெர்ஜீனியா, அமெரிக்கா

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தென்பட்டது.

வியாழக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 முதல் 6.41 மணிவரை இந்த சூரிய கிரகணம் தென்பட்டது. எனினும், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்படவில்லை.

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா வெளியிட்டுள்ள வரைபட காட்சியின்படி இந்த சூரியகிரகணம் பகுதியளவு லடாக், அருணாசல பிரதேசத்தின் சில இடங்களில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக சில நொடிகள் தென்பட்டன.

இதேவேளை, அமெரிக்காவின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதி, ஐரோப்பா, வடக்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டது. இந்த காட்சிகளை நாசா பதிவு செய்து நேரலையாக ஒளிபரப்பியது.

சூரிய கிரகணத்தின்போது நெருப்பு வளையத்தில் சூரியன் இருப்பது போல காட்சியளித்தது.

சூரியன், நிலவு, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த வானியல் நிகழ்வு, பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.

எனினும் நிலவின் அளவு சூரியனுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது என்பதால், அதனால் முழுமையாக சூரியனை மறைக்க முடியாது. பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே வரும்போது நிலவை சூரியன் மறைத்திருப்பதால், பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோற்றமளிக்கும்.

இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகண நிகழ்வு நடக்கின்றன. ஒன்று ஜூன் 10ஆம் தேதி நிகழ்ந்து விட்டது. அடுத்த சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், அந்த சூரிய கிரகணமும் இந்தியாவில் தென்படாது என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 26ஆம் தேதி சூப்பர் பிளட்மூன் எனப்படும் சந்திர கிரகண நிகழ்வு நடந்தது. அதுவும் இந்தியாவில் தென்படவில்லை.

உலகின் பிற பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணத்தின் படங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

சூரிய கிரகணம்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, அமெரிக்காவின் கேப்பிடல் ஹில் பின்புறம்
சூரிய கிரகணம்

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, மிஷிகன், அமெரிக்கா
சூரிய கிரகணம்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, அமெரிக்காவின் டெலவேர்
சூரிய கிரகணம்

பட மூலாதாரம், @AntonFalcoWx

படக்குறிப்பு, டொரொன்டோ, கனடா
சூரிய கிரகணம்

பட மூலாதாரம், HEATHER MULLAN

படக்குறிப்பு, அபெர்டீன்ஷயர், ஸ்காட்லாந்து
சூரிய கிரகணம்

பட மூலாதாரம், MATT TILDESLEY

படக்குறிப்பு, எம்போ கடற்கரை, ஹைலேண்ட்ஸ், பிரிட்டன்
சூரிய கிரகணம்

பட மூலாதாரம், COLIN RIACH

படக்குறிப்பு, எடின்பரோ, பிரிட்டன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :