அருகி வரும் விலங்கினத்தை குளோனிங் மூலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

ஃபெர்ரெட்

பட மூலாதாரம், USFWS

முயல்களையும், எலிகளையும் வேட்டையாடும் அருகி வரும் விலங்கினமான ஃபெர்ரெட்டை, அதேபோன்ற ஒரு விலங்கின் மரபணுவைப் பயன்படுத்தி குளோனிங் (படியெடுத்தல்) முறையின் மூலம் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

1988-ம் ஆண்டு முதல் உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஃபெர்ரெட்டை ஒத்திருக்கும் விலங்கின் மரபணுக்களை கொண்டே புதிய ஃபெர்ரெட்டை குளோனிங் செய்திருக்கிறார்கள்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

புதிதாகப் பிறந்திருக்கும் ஃபெர்ரெட்டுக்கு எலிசபெத் ஆன் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அருகிவரும் விலங்கினங்களை குளோனிங் செய்தது இதுவே முதல் முறை.

ஒருகட்டத்தில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட, கருப்பு கால்களை கொண்ட அனைத்து ஃபெரெட்டுகளும் 1981இல் கண்டறியப்பட்ட ஏழு மூதாதையர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படுகிறது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மிகவும் அருகி வரும் ஃபெர்ரெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த குளோனிங் உதவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 10-ம் தேதி எலிசபெத் ஆன் என்கிற ஃபெர்ரெட் குளோனிங் செய்யப்பட்டு பிறந்ததை 'ஒரு துணிவுமிக்க முன்னேற்றம்' என அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறை தெரிவித்தது.

வில்லா என பெயர் சூட்டப்பட்ட விலங்கில் இருந்த மரபணுவை வைத்தே எலிசபெத் ஆன் குளோன் செய்யப்பட்டது.

வில்லா, கருப்பு கால்களைக் கொண்ட ஃபெர்ரெட்டின் ஏழு மூதாதையர்களில் ஒன்று அல்ல. 1981-ம் ஆண்டு ஃபெர்ரெட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், அந்த இனமே ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டதாகாக கருதப்பட்டது.

வில்லா என பெயரிடப்பட்ட விலங்குக்கு சந்ததிகள் இல்லை. வில்லாவின் குளோன், அதன் மரபணு பன்முகத்தன்மையை அதிகரிக்கும், அதோடு ஃபெர்ரெட் இனம் மீள உதவும்.

"இந்த ஆராய்ச்சி தொடக்க நிலையில் இருக்கிறது என்றாலும், வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஓர் உயிரினத்தை குளோன் செய்வது இதுவே முதல் முறை. கருப்பு கால்களைக் கொண்ட ஃபெர்ரெட்டுகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, நல்ல பலன் கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது" என அமெரிக்க மீன் மற்றும் வன விலங்கு சேவைத் துறையின் ப்ரேரி பிராந்தியத்தின் இயக்குநர் நூரின் வால்ஷ் கூறினார்.

எலிசபெத் ஆன் வனப் பகுதியில் விடுவிக்கப்படாது. அது பிறந்த கொலராடோ மையத்திலேயே தொடர்ந்து வாழும். எனவே ஆராய்ச்சியாளர்கள் அதை ஆராய்ச்சி செய்ய முடியும்.

இந்த ஃபெர்ரெட் 'வையாஜென் பெட்ஸ் மற்றும் ஈக்வின்' என்கிற விலங்கின குளோனிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதாவது, கரு பரிமாற்றம் மூலம் மற்றொரு ஃபெர்ரெட்டில் செலுத்தப்பட்டு பிறந்தது.

இதே வழிமுறையில் கடந்த கோடை காலத்தில், ஒரு மங்கோலிய காட்டுக் குதிரை குளோன் செய்யப்பட்டது. குர்ட் என்கிற குதிரையின் 40 ஆண்டு கால பழைய மரபணுவை வைத்து, பெர்ஸ்வால்ஸ்கி என்கிற குதிரை குளோன் செய்யப்பட்டது.

ஃபெர்ரெட்

பட மூலாதாரம், USFWS

கருப்பு கால்களைக் கொண்ட ஃபெர்ரெட் வட அமெரிக்காவில் காணப்படும் ஒரே ஒரு ஃபெர்ரெட் இனம். அது தற்போது அருகிவரும் பாலூட்டிகளாக இருக்கின்றன.

ஃபெர்ரெட்டை ஒத்த விலங்கினமான மிங்க்குகளுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவியதால், அவை பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில், கடந்த சில மாதங்களில் இறந்தன. இந்த தொற்று பரவாமல் இருக்க லட்சக்கணக்கிலான மிங்க்குகள் ஐரோப்பா கண்டம் முழுவதிலும் அழிக்கப்பட்டன.

ஃபெர்ரெட்டுகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க, கடந்த கோடை காலத்திலேயே 120-க்கும் மேற்பட்டவைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: