20 லட்சம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு கண்டுபிடிப்பு - மனித பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியில் மைல்கல்

20 லட்சம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு கண்டுபிடிப்பு - மனித பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியில் மைல்கல்

பட மூலாதாரம், LA TROBE UNIVERSITY

தென் ஆப்ரிக்காவில் 20 லட்சம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் பரிணாம வளர்ச்சி மீதான ஆராய்ச்சிக்கு இது மேலும் உதவும் விதத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித இனம் போல வாழ்ந்த ஒரு இனத்தின் எலும்புக்கூடான அது, நவீன மனிதர்களின் நேரடி மூதாதையர்களுக்கு தொடர்புடைய ஒரு இனத்துடனானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மனித இனமும், பரோன்த்ரோபஸ் ரோபஸ்டஸ் என்ற அந்த இனமும் ஒன்றாக ஒரே நேரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், ரோபஸ்டஸ், விரைவிலேயே அழிந்துவிட்டது.

இந்த கண்டுபிடிப்பு உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இதுதொடர்பான பல்வேறு எலும்புக்கூடுகளுக்கு ஒரே ஒரு பல், அல்லது அவற்றுக்கு ஒரு சில பற்களே இருக்கும். ஆனால், இது மாறுபட்டிருக்கிறது. இது அரிதானதாக உள்ளது" என பிபிசியிடம் தெரிவித்தார் ஆராய்ச்சியாளர் ஏஞ்சலீன் லீஸ்.

தென் ஆப்ரிக்காவில் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு விதமான மனிதன் போன்ற இனங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிகாரில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக - நிதிஷ் கூட்டணி

பிகாரில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக - நிதிஷ் கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

பிகார் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக - முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. அங்கு ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.

எதிரணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்த மகாகட்பந்தன் கூட்டணி மொத்தம் 110 இடங்களில் வென்றுள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி: சீன மருந்தின் பரிசோதனை பிரேசிலில் இடை நிறுத்தம்

சீன மருந்தின் பரிசோதனை பிரேசிலில் இடை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

பிரேசிலில் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு செலுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பரிசோதனைகளை அந்நாடு இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து சினோவேக் பயோடெக் எனும் சீன நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்தாகும்.

'கொரோனோவேக்' எனும் இந்தத் தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டவர்களுக்கு மோசமான விளைவு ஏற்பட்டது என்று மட்டும் தெரிவித்துள்ள பிரேசில் சுகாதார ஒழுங்காற்று அமைப்பான 'அன்விசா' இந்த சம்பவம் அக்டோபர் 29ம் தேதி நடந்தது என்பதைத் தவிர மேலதிக தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

பாஜகவின் வேல் யாத்திரை வழக்கு: 'வேல் ஓர் ஆயுதம், ஆயுத சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டுள்ளது'

பாஜக

பட மூலாதாரம், L MURUGAN TWITTER

தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரையில் தமிழக அரசு தலையிடக்கூடாது என உத்தரவிடமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வேல் யாத்திரை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது என்றும் தமிழக அரசு இந்த யாத்திரையில் தலையிடக்கூடாது என்றும் கோரப்பட்டது.

பாஜகவினர் ஒருங்கிணைத்துள்ள வேல் யாத்திரைக்கு மட்டும்தான் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்றும் பிற அரசியல் நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும் பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

ஐபிஎல் 2020 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், BCCI / IPL

நடக்குமா? நடக்காதா? நடந்தால் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? ரசிகர்கள் இல்லாத போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்குமா? - கடந்த 2 மாதங்களாக ஏராளமான கேள்விகள், யாரிடமும் பதில் இல்லாத கேள்விகள்.

அனைத்து கேள்விகளுக்கும் நவம்பர் 10-ஆம் தேதி வரை, 53 நாட்களாக நடந்த 2020 ஐபிஎல் தொடர் விடையளித்து விட்டது. கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாட்டால் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாத ரசிகர்கள் தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் கண்டு ரசித்தனர், போட்டிகளுக்கு ஆதரவளித்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: