`வரலாற்றின் தொங்குநிலையில்' மனிதர்கள் - உலகின் எதிர்கால சவால்கள் என்ன?

`வரலாற்றின் தொங்குநிலையில்' நாம் வாழ்கிறோமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரிச்சர்ட் பிஷர்
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

"இப்போது வாழும் காலம்தான் முன் எப்போதையும்விட தாக்கத்தை ஏற்படுத்திய காலம் என்று சொல்ல முடியுமா?" இது ஏன் முக்கியம் என்பதை ரிச்சர்ட் பிஷர் விவரிக்கிறார்.

இந்தத் தருணத்தை வர்ணிக்க சிறப்பான வார்த்தை எதுவாக இருக்கும்? `முன் எப்போதும் இல்லாத வகையிலானது' என்றோ அல்லது ``அசாதாரணமானது'' என்றோ கூறலாம் என்று உங்களுக்குத் தோன்றலாம்.

ஆனால் இதுவரை நீங்கள் அநேகமாக கேள்விப்பட்டிராத இன்னொரு வார்த்தை உள்ளது: அது, ``பிணைப்புத் தன்மை''

இது நேர்த்தியான ஒரு வார்த்தையாக இல்லாதிருக்கலாம். ஆனால் ஆழமான எண்ணத்தை விவரிக்கும் சிறந்த வார்த்தையாக இருக்கும். கடந்த காலங்களில் இல்லாத அளவிக்கு, அதிக தாக்கத்தை ஏற்படுத்திய காலத்தில் நாம் வாழ்வதாகச் சொல்லலாம். கோவிட்-19 மற்றும் 2020 ஆம் ஆண்டின் அரசியலைவிட இது அதிகமானதாக இருக்கும். நாம் வாழும் நூற்றாண்டில் நடக்கும் நிகழ்வுகள், அடுத்த பல மில்லியன் ஆண்டுகளுக்கு இல்லாவிட்டாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நமது இனத்தின் விதியை உருவாக்குவதாக இருக்குமா என்பது பற்றி தத்துவஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் விவாதித்து வருகிறார்கள். ``வரலாற்றின் பிணைப்பு'' என்ற அனுமானம், இப்போது நாம் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம் என்பதைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. உண்மையில் இது போலியானதா?

இன்றைக்கு உயிருடன் இருப்பவர்கள் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்ற எண்ணம், பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது என்று தத்துவஞானி டெரெக் பர்பிட் கூறுகிறார்.

``நாம் வரலாற்றின் பிணைப்பில்'' வாழ்கிறோம் என்று - ஆன் வாட் மேட்டர்ஸ் - என்ற தனது புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

``கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பார்த்தால், உலகம் இவ்வளவு வேகமாக எப்போதும் மாற்றம் கண்டிருக்கவில்லை என்பதை அறியலாம். நமது சுற்றுப்புறங்களை, நிலைமாற்றம் செய்வது மட்டுமின்றி நம்மையும் நமது சந்ததியினரையும் நிலை மாற்றம் செய்யும் அபாரமான சக்திகள் விரைவில் நமக்குக் கிடைக்கப் போகிறது'' என்று அவர் கூறியுள்ளார்.

வரலாற்றின் பிணைப்பில் என்ற அனுமானம், கடந்த சில மாதங்களில் புதிய கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இருந்தாலும், கல்வியாளர்கள் இந்தக் கேள்விக்கு அதிக நடைமுறைகளின்படி பதில்களைக் காண முயற்சிக்கின்றனர். பிறர் நலன் பேணுதலில் அர்ப்பணிப்பு கொண்ட ஒர் கூட்டமைப்பு குறித்து ஆழமான அனுமானத்தின் பகுப்பாய்வு கட்டுரை ஒன்றை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தத்துவஞானி வில் மேக்கஸ்கில் கடந்த ஆண்டு எழுதியதைத் தொடர்ந்து இந்த விவாதம் தொடங்கியுள்ளது. மிகவும் நன்மையானவற்றுக்கான காரணம் மற்றும் ஆதாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஆய்வில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்தக் கேள்வியை தங்களுடைய கோணத்தில் பார்த்து, மற்ற அறிஞர்கள் நூறுக்கும் மேற்பட்ட கமெண்ட்களைப் பதிவு செய்தனர். விரிவான பாட்காஸ்ட் -களும் கட்டுரைகளும் கூட இருந்தன. எனவே பர்பிட்டை கௌரவிக்கும் வகையில் ஒரு புத்தகத்தின் அத்தியாயமாக மேக்கஸ்கில் இதை வெளியிட்டார்.

`வரலாற்றின் தொங்குநிலையில்' நாம் வாழ்கிறோமா?

பட மூலாதாரம், Getty Images

மனித இனங்களின் நீண்டகால எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு, நமது சமூகங்கள் எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று அடையாளம் காண்பதை இலக்காகக் கொண்டு, வரலாற்றின் பிணைப்பு குறித்து "Vox Future Perfect" அமைப்பை சேர்ந்த கெல்செ பைப்பர் அந்த சமயத்தில் எழுதினார்.

இந்தத் தருணத்தின் ``பிணைப்பு நிலை'' என்பதற்கு ஆதரவாக வைக்கப்படும் வாதங்களை பார்ப்பதில் இருந்து, நமது புரிதலைத் தொடங்குவோம்.

முதலில், ``அபாயங்களின் காலம்'' என்ற கண்ணோட்டம் இருந்தது. சமீப ஆண்டுகளாக தன் இனத்தை தானே அழித்துக் கொள்ளக் கூடிய மற்றும் பூமிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய, வழக்கத்திற்கு மாறான ஆபத்து வாய்ப்புகள் உள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்ற கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

பிரிட்டனின் விண்வெளி வீரர் ராயல் மார்ட்டின் ரீஸ் பின்வருமாறு இதைக் குறிப்பிடுகிறார்: ``நமது பூமி 45 மில்லியன் நூற்றாண்டுகளாக உள்ளது. ஆனால் இந்த நூற்றாண்டு விசேஷமானது: மனிதன் என்ற இனத்தின் கையில் பூமியின் எதிர்காலம் உள்ளது.'' முதன்முறையாக திரும்ப சரி செய்ய முடியாத வகையில், உயிரினங்கள் வாழும் கோளத்தின் வளத்தை சிதைக்க அல்லது தவறான திசையில் கொண்டு செல்லக் கூடிய திறன் கொண்டவர்களாக, மக்களின் நாகரிக வாழ்வில் பேரழிவு நிலையிலான பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம் என்று ரீஸ் கூறியுள்ளார். இது தொடர்பான ஓர் ஆய்வு மையத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

நமது ஞானத்தை செயல் இழக்கச் செய்வதாக பேரழிவு சக்திகள் இருக்கின்றன என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேக்கஸ்கில் உடன் பணிபுரிபவர்களில் ஒருவரான டோபி ஆர்டு கூறியுள்ளார்.

"தி பிரிசிப்பைஸ்" என்ற தலைப்பில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புத்தகத்தில், இனம் அழிவதைத் தடுப்பதற்கான அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆர்டின் புத்தகத்தின் தலைப்பு நமக்கு அலர்ஜியைத் தருவதாக இருக்கும்: செங்குத்தான சரிவின் விளிம்பில் உள்ள ஒரு பாதையில் இருக்கிறோம், ஓர் அடி தவறாக எடுத்து வைத்தாலும் பேரழிவு நிச்சயம் என அர்த்தம் கொண்டதாக அது உள்ளது. சுழன்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பசுமையான, ரம்மியமான வாய்ப்புகள் நம் கண் எதிரே இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால் அசாதாரணமான மற்றும் ஆபத்தான காலத்தை நாம் கடந்தாக வேண்டும். இந்த நூற்றாண்டில் இனம் அழிவதற்கான வாய்ப்பு ஆறில் ஒரு பங்கு அளவுக்கு உள்ளதாக ஆர்டு கூறுகிறார்.

நமது முன்னோர்கள் ஒருபோதும் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராத பேரழிவு மற்றும் ஆபத்துகளை நாமே உருவாக்கிக் கொண்டோம்.

இதுதான் இப்போது பற்றிக் கொண்டு தொங்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்று ஆர்டு கருதுகிறார். அணு ஆயுத போர் அல்லது உயிரைக் கொல்லும் கிருமிகளை உருவாக்குதல் போன்றவற்றை உதாரணங்களாக அவர் குறிப்பிடுகிறார்.

இதற்கிடையில், மனித இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு சிறிதளவே முயற்சிக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார்.

ஐ.நா.வின் உயிரி ஆயுத கூட்டமைப்பு: சூப்பர் - கொரோனா வைரஸ் போன்ற உயிரி - ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு எதிராக உலக அளவில் தடை விதிக்கும் முயற்சிக்கு ஒதுக்கிய பட்ஜெட், சராசரி மெக்டனால்ட் உணவக நிறுவனத்தின் அளவைவிடக் குறைவாக உள்ளது. நமது வாழ்க்கைக்கு முடிவு கட்டும் தொழில்நுட்பங்களைத் தடுப்பதற்கு செலவிடுதலை விட, ஐஸ் கிரீம்களில் உலகம் அதிகம் செலவு செய்கிறது.

`வரலாற்றின் தொங்குநிலையில்' நாம் வாழ்கிறோமா?

பட மூலாதாரம், Getty Images

ஐ.நா.வின் உயிரி ஆயுத கூட்டமைப்பு, சூப்பர் - கொரோனா வைரஸ் போன்ற உயிரி - ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு எதிராக உலக அளவில் தடை விதிக்கும் முயற்சிக்கு ஒதுக்கிய பட்ஜெட், சராசரி மெக் டொனால்ட் உணவக நிறுவனத்தின் அளவைவிடக் குறைவாக உள்ளது.

`வரலாற்றின் தொங்குநிலையில்' நாம் வாழ்கிறோமா?

பட மூலாதாரம், Getty Images

நாம் துரோகம் இழைக்கும் திருப்புமுனையில் இருக்கிறோம் என்பது, பற்றிக்கொண்டு தொங்கும் நிலை என்ற அனுமானத்திற்கு ஆதரவான இரண்டாவது வாதத்தின் அடிப்படையாக இருக்கிறது.

21வது நூற்றாண்டில் அதிநவீன செயற்கை புலனறிதல் சாதன வசதிகள் வந்துவிடும், அவை சூப்பர் புத்திசாலித்தனம் கொண்டதாக வேகமாக மாறும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமாற்றத்தை நாம் எப்படி கையாளப் போகிறோம் என்பதுதான் மனித நாகரிகத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப் போகிறது, அது ஒரு மாதிரியாக ``பொறியில் சிக்கியது போன்ற'' நிலையாக இருக்கும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்வ வல்லமைமிகுந்த சூப்பர் புத்திசாலித்தனம் என்பது மனிதகுலத்தின் விதியை நிர்ணயிப்பதாக இருக்கும், லட்சியங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் அது அமையும் என்று கூறப்படுகிறது. ஆனால், நடப்பதற்கு சாத்தியம் உள்ள இன்னொரு சூழலையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். செயற்கைப் புலனறிதலை முதலில் யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து, மனித நாகரிகத்தின் எதிர்காலம் அமையும். எல்லோருடைய நன்மைக்காக அதை வழிநடத்தும் ஒற்றை சக்தியாக அது இருக்குமா அல்லது எதிர்ப்பாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் தீய எண்ணம் கொண்ட அரசாங்கத்திடம் இருக்குமா என்பதைப் பொருத்து அது அமையும்.

செயற்கைப் புலனறிதல் நுட்பம் நீண்டகால ஆதிக்கம் செலுத்தும் என்று எல்லோரும் கூறவில்லை. ஆனால், செயற்கைப் புலனறிதல் நுட்பத்தில் சிறிதளவு தவறாக பயன்படுத்தப்பட்டாலும், நீண்டகாலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது உண்மை - அது மனித வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு பல தசாப்தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். அந்தக் காரணத்தால் தான் மனித குலத்துக்கு நன்மையை செய்யும் முயற்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள் செயற்கைப் புலனறிதல் பாதுகாப்பு மற்றும் நன்னெறிகள் குறித்த செயல்பாடுகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பற்றுதலில் தொங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அனுமானத்துக்கு ஆதரவாக பல ஆதாரங்களை நீங்கள் ஒன்று திரட்ட முடியும். உதாரணமாக, இந்த நூற்றாண்டில் மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிப்பு ஆகியவை எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தன்மையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லியூக் கெம்ப் கூறியுள்ளார். ``விவசாயப் புரட்சிக்கு வித்திட்டது தான் மனித வரலாற்றில் இதுவரை நடந்தவற்றில் முக்கியமான நிலை மாற்றமாக உள்ளது'' என்கிறார் கெம்ப். ``குறுகிய பருவநிலை சூழலுக்கு மனித சமுதாயங்கள் தகவமைப்பு செய்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. முன் எப்போதும் இல்லாத மற்றும் அபாயகரமான புவியியல் பரிசோதனையை செய்யக் கூடிய நூற்றாண்டாக இது இருக்கும். அநேகமாக பருவநிலை சார்ந்த வாழ்விடத்திற்கு வெளியே தள்ளப்படும் அல்லது படுகுழியில் இருந்து மீள முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம்.'' (இந்த அனுமானம் மற்றும் வாய்ப்புகளில் கெம்ப்புக்கும் சந்தேகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. )

மனித இனத்தின் இளமை நம்மை செல்வாக்கு கொண்டவர்களாக உருவாக்குகிறது என்று நீங்கள் வாதிடலாம். மனித வரலாறு என்பது 10 ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதையொட்டியதாக மட்டுமே உள்ளது. பிற்காலத்தில் வரக் கூடிய தலைமுறைகளுக்காக மாற்றங்களைத் தடுக்கும், மாண்புகளை, உத்வேகங்களை உருவாக்கும் பெரிய திறன் முந்தைய தலைமுறையினருக்கு இருந்திருக்கும் என்றும் வாதங்கள் வைக்கப் படுகின்றன. இன்றைக்கு குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள், தங்கள் வாழ்நாளில் எஞ்சிய காலத்தில் இந்த வடுக்கள் மற்றும் வளர்ச்சி பாதிப்புகளைக் கொண்டதாக இருந்தாக வேண்டும் என்று நாம் யோசிக்கலாம்.

நமது இளமைக்கால சூழல்கள் இதற்கு எதிரான வாதங்களை வைப்பதாக உள்ளன. மேலும் இது நியாயமான இன்னொரு கேள்வியை எழுப்புகிறது - முதலாவது தலைமுறை மனிதர்கள் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் காலத்தில் வாழ்ந்தார்களா என்பதே அது. பாலியோசினி காலத்தில் சில தவறான நடவடிக்கைகள் அல்லது வேளாண் புரட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லாதிருந்தால் நமது வாழ்க்கை முறையே வந்திருக்காது என்றும் வாதிடுகிறார்கள்.

இருக்கலாம். ஆனால் மனித வரலாற்றில் பல தருணங்கள் முக்கியமானவையாக இருந்தாலும், அவை தாக்கத்தை ஏற்படுத்தின என்று சொல்ல முடியாது என்று மெக்கஸ்கில் கூறுகிறார். வேட்டையாடுதல், விளை பொருட்களை சேகரிக்கும் காலக்கட்டத்தில் இருந்தவர்களுக்கு பற்றிக்கொண்டு வாழும் அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி தங்களுக்கு இருப்பதாக அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும், என்ன செய்வது என்ற வாய்ப்புகள் பற்றி தெரிந்திருக்காது. ஏராளமான பாதைகளில் சரியான ஒன்றைத் தேர்வு செய்யும் திறன் மற்றும் விழிப்புணர்வு என்பது தான் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை என்று மெக்கஸ்கில் கூறுகிறார்.

அது ஏன் முக்கியமாகிறது?

இது குறித்து மெக்கஸ்கில் மற்றும் பிறர் ஏன் முக்கியத்துவமாகப் பேசுகிறார்கள் என்பதற்கு தாக்கம் ஏற்படுத்தும் தன்மை என்பது பற்றிய வரையறை விளக்குகிறது. பற்றிக்கொண்டு தொங்கும் நிலையிலான வரலாறு என்ற அனுமானம், தத்துவார்த்த கேள்விகளுக்கும் மேலானதாக இருக்கிறது என்று மெக்கஸ்கில் மற்றும் பிறர் கருதுகின்றனர். குறுகிய காலம் மற்றும் நீண்ட கால பிரச்சினைகளை சரி செய்வதற்கு வழிமுறைகளைக் கண்டறிவது, அவற்றை எவ்வளவு காலத்துக்கு கடைபிடிப்பது என்பவற்றுக்குப் பதில் கண்டுபிடித்தாக வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இதை உணர வேண்டுமானால், உங்கள் வாழ்வில் இதுவரை இல்லாத ஒரு முக்கியமான விஷயம் நாளை நடக்கப் போகிறது - அதாவது முக்கியமான தேர்வு உள்ளது அல்லது வாழ்க்கைத் துணைவரை மணக்கப் போகிறீர்கள் என்றால் - அதற்காக நீங்கள் நிறைய நேரம் செலவிட்டு ஆர்வம் காட்டுவீர்கள். இருந்தாலும், உங்கள் வாழ்வில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் காலம் தசாப்தங்களை கடந்ததாக இருக்கலாம் அல்லது அது எந்த நாளாக இருக்கும் என்று அறியாமல் இருக்கலாம். அப்போது மற்ற விஷயங்களுக்கு நீங்கள் முன்னுரிமை தருவீர்கள்.

செயல்திறன் மிகுந்த மனிதகுலத்தின் நன்மைக்கான அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் மெக்கஸ்கில். நீண்ட கால அடிப்படையில் என்ன செய்யலாம் என்பதில் அதிக காலத்தை செலவிட்டவர். அதிமோசமான நிலையில் நாம் தொற்றிக்கொண்டிருப்பதாக, சிறந்த மனிதநலன் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டால், முக்கியமான ஆபத்து விஷயங்களைக் குறைப்பதில் அதிக நேரம் மற்றும் பணத்தை செலவழிப்பதற்கு யோசனை கூறுவார்கள். நிறைய பேர் அப்படி செய்திருக்கிறார்கள்.

இருந்தாலும், தொற்றிக் கொண்டிருக்கும் நிலை என்பது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் ஏற்படும் என்று மனிதநலன் ஆய்வாளர்கள் கருதினால், தங்களது வழித்தோன்றல்களுக்கு உதவக் கூடிய விஷயங்கலில் முதலீடு செய்தல் போன்ற நீண்டகால திட்டங்களை மேற்கொள்வார்கள். உதாரணமாக, 5 சதவீத லாபம் தரக் கூடிய வளங்களில் ஒருவர் இப்போது முதலீடு செய்தால், 200 ஆண்டுகள் கழித்து அது 17 ஆயிரம் மடங்கு வளர்ந்திருக்கும் என்கிறார் மெக்கஸ்கில்.

வரலாறு முழுக்க சமூக பாதிப்புகளினால் நிதி நிலைமை அழிந்து போனதை பார்க்கும்போது, இதுபோன்ற நீண்டகால முதலீடுகளின் பயன்கள் குறித்து சிலர் கேள்விகள் எழுப்புகின்றனர். வறுமை போன்ற இப்போதுள்ள பெரிய பிரச்சனைகளில் பணத்தை செலவு செய்வது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து மீள்வது தான், ஓர் இனத்தின் நன்மைக்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய அவசியத்தைத் தெரிவிப்பதாக, வளமையான எதிர்காலத்தை உருவாக்க உதவிடுவதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

"அந்தர நிலை" எண்ணத்திற்கு எதிரான கருத்துகள்

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அனுமானத்திற்கு ஆதரவாக மேற்சொன்ன கருத்துகள் உள்ளன என்றாலும், அதற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்கள் எவை?

நேரடியாக சொல்லக் கூடிய எளிமையான பதில், இது நடப்பதற்கு எந்த அளவுக்கு சாத்தியக்கூறு உள்ளது என்பதே. இது அநேகமாக நடக்க வாய்ப்பில்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது.

நாம் கடந்த கால உயிரின வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, பாலூட்டி இனங்களின் வாழ்க்கை காலத்தை பார்த்தால், மனித இனம் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த காலத்தில் நாம் நட்சத்திரங்களையும், மற்ற கிரகங்களையும் அறிந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த ஆண்டு BBC Future-ல் நான் எழுதியபடி, நமக்குப் பிறகு இன்னும் பெருமளவு மனிதர்கள் பிறக்கப் போகிறார்கள். அடுத்த 50 ஆயிரம் ஆண்டுகளை பார்த்தாலும்கூட, எதிர்கால தலைமுறையினரின் எண்ணிக்கை பிரமாண்டமானதாக இருக்கும். 21வது நூற்றாண்டில் உள்ளதைப் போலவே பிறப்பு விகிதம் நீடிக்குமானால், கடந்த காலங்களில் வாழ்ந்த மனிதர்களைக் காட்டிலும் 62 மடங்கு அதிகமான பேர் பிறக்கப் போகிறார்கள் - சுமார் 6.75 ட்ர்ல்லியன் பேர் ஆக அந்த எண்ணிக்கை இருக்கும்.

`வரலாற்றின் தொங்குநிலையில்' நாம் வாழ்கிறோமா?

பட மூலாதாரம், Getty Images

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்கள் பிறக்கப் போகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக மிக சிறிய பகுதியினராக நாம் இருப்போம் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்று மெக்கஸ்கில் கூறுகிறார். எதிர்கால தலைமுறையினர், இன்றைக்கு நாம் உள்ளதைவிட அதிக நெறி சார்ந்த மற்றும் அறிவியல் ரீதியாக ஞானம் பெற்றவர்களாக இருக்கப் போகிறார்கள். எனவே நாம் நினைத்துப் பார்த்திராத வகையில், எதிர்காலத்தை உருவாக்குவதில் செல்வாக்கைச் செலுத்த நிறைய செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அப்படி நடக்காது என்று சொல்வதற்கில்லை என்பதுடன், அது ``மர்மம் கொண்டதாக'' இருக்கும் என்று மெக்கஸ்கில் கூறுகிறார். வரலாற்றின் விளிம்பில் தொற்றிக் கொண்டு இருக்கிறோம் என்பது தவறான வாதங்களைக் கூறுவதாக உள்ளது, தங்களை அறியாமல் சீரான நிலையை கலைக்கும் செயல் என்று கூறுகிறார்கள். அறிவாற்றலுடன் கூடிய கருத்துகள் நடந்தால் என்ன நிகழும்? முதலில், இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகள், உண்மையான தன்மையைக் காட்டிலும் முக்கியமானதாகத் தோன்றும். உதாரணமாக, 1980களில் வாழ்ந்தவர்களுக்கு நேனோ தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று தோன்றியிருக்கும். ஆனால் அது எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டது.

அனுமானங்களின் சங்கிலித் தொடர், நாம் தாக்கத்தை ஏற்படுத்தும் காலத்தில் வாழ்கிறோம் என்ற முடிவை தெரிவிக்கும் என்றால், நமது சிந்தனை தவறாகி விட்டது என்று யோசிக்க வேண்டும்

இரண்டாவதாக, உறுதிப்படுத்தலில் ஒருசார்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது: தற்போது உயிர்வாழ்வதற்கான ஆபத்துகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் (இந்தக் கட்டுரையில் மற்ற அனைத்து ஆராய்ச்சியாளர்களும் கூறுவதைப் போல) என்று நீங்கள் கருதினால், அந்த முடிவுக்கு வருவதற்கான வாதங்களை உங்களை அறியாமல் ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

``அனுமானங்களின் சங்கிலித் தொடர், நாம் தாக்கத்தை ஏற்படுத்தும் காலத்தில் வாழ்கிறோம் என்ற முடிவை தெரிவிக்கும் என்றால், முடிவு எதார்த்தத்தில் உண்மை என்பதைவிட நமது சிந்தனை தவறாகி விட்டது, என்று யோசிக்க வேண்டும்'' என்று மெக்கஸ்கில் எழுதியுள்ளார்.

இந்தக் காரணங்களால், நாம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் காலக்கட்டத்தில் வாழ்வதாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்று மெக்கஸ்கில் கூறுகிறார். மற்ற காலக்கட்டங்களைக் காட்டிலும் இப்போது நாம் தொற்றிக் கொண்டிருக்கும் அசாதாரண நிலையில் வாழ்கிறோம் என்று நினைக்க வைக்கும் வாதங்கள் இருந்தாலும், மனிதகுலம் இன்னும் நீண்டகாலம் வாழும் என்பதைக் கருத்திக் கொண்டு பார்த்தால், உண்மையில் தொற்றிக் கொண்டு அந்தரத்தில் தொங்கும் நிலை என்பது எதிர்காலத்தில் தான் வரும் என கூறலாம் என்கிறார் மெக்கஸ்கில்.

ஊசலாட்டம் இல்லை என்பதன் சாதகம்

மிகவும் முக்கியமான காலத்தில், மிகவும் முக்கியமான தலைமுறையினராக நாம் இல்லை என்ற முடிவுக்கு வருவது பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதாக இருந்தாலும், அது நல்லதாகவும் இருக்கிறது.

``அழிவுகளின் காலம்'' என்ற கண்ணோட்டத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அடுத்த நூற்றாண்டு மிகவும் அபாயகரமானதாக இருக்கும், மனி இனம் பிழைத்திருப்பதை உறுதி செய்வதற்கு குறிப்பிடத்தக்க தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். கெம்ப் சுட்டிக்காட்டுவதைப் போல, எதிர்காலம் குறித்த அனுமானங்கள் குறித்து அச்சங்கள் அதிகமாக இருந்தால், அவற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மனம் விரும்பாத செயல்களையும் சில நேரம் நியாயப்படுத்துவார்கள்.

``அனுமானிக்கப்பட்ட அச்சுறுத்தல்களை சமாளிக்க அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த நீண்ட வரலாறுகள் உண்டு. அவசரகால அதிகாரங்கள் அமல் செய்யப்பட்டுள்ளன'' என்கிறார் அவர். உதாரணமாக, கெட்ட எண்ணத்துடன் செயற்கைப் புலனறிதல் நுட்பத்தைப் பயன்படுத்துவது அல்லது பேரழிவு தொழில்நுட்பங்கள் உருவாக்குதலைத் தடுப்பதற்கு, பூமியில் வாழும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது, 24 மணி நேரமும் இது தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஊசலாட்டத்தில் உள்ள மனிதகுல வாழ்வை காப்பாற்ற தியாகங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மற்றவற்றை விட்டுவிடலாம் என்று அர்த்தம் கிடையாது. எதிர்காலம் குறித்து நமது பொறுப்புகளை நீக்குவதாக அது இருக்காது. இந்த நூற்றாண்டில் நாம் நிறைய சேதாரங்களை ஏற்படுத்துவோம். ஓர் இனத்தையே அழிக்கும் அளவுக்கு பேராபத்து நிறைந்ததாக அவை இல்லாமல் போகலாம். கடந்த நூற்றாண்டில், நாம் அடுத்த தலைமுறையினருக்கு கெடுதலான விஷயங்களை உருவாக்கிவிட்டோம். வளிமண்டலத்தில் கார்பன் சேர்த்தது, கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை சேர்த்தது, பூமிக்கடியில் அணுக்கழிவுகளை சேமிப்பது போன்றவை இதில் அடங்கும்.

எனவே, நமது காலம் தான், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்குமா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நாளைய உலகில் பிறக்கப் போகும் பல பில்லியன் பேரின் வாழ்க்கையை வடிவமைக்கும் அதிகாரத்தை அதிகமாகக் கொண்டவர்களாக நாம் இருக்கிறோம் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். அது நல்லதாக இருக்க வேண்டுமா, மோசமானதாக இருக்க வேண்டுமா என்பதை நம்மால் நிர்ணயிக்க முடியும். அந்த செயலாக்கத் திறனை நாம் எப்படி பயன்படுத்தினோம் என்பதை, எதிர்கால வரலாற்றாளர்கள் தான் சொல்ல முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: