அமேசான் காடுகளில் உள்ள ஒரு டீஸ்பூன் மண்ணில் 400 பூஞ்சைகள் - வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

அமேசான் காடுகளில் உள்ள 1 டீஸ்புன் மண்ணில் 400 பூஞ்சைகள்:வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

பட மூலாதாரம், CAMILA DUARTE

    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, பிபிசி சுற்றுசூழல் செய்தியாளர்

அமேசான் காடுகளில் உள்ள ஒரு டீஸ்பூன் மண்ணில் 400 பூஞ்சைகள் உள்பட 1,800 நுண்ணுயிரிகள் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

பூமியின் நிலத்தடியில் உள்ள மண்ணில் நம் கண்ணிற்கு தெரியாத, அரியவகை பண்புகளை கொண்ட வளங்கள் உள்ளன. தற்போது அவற்றை தெரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியை தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் சுமார் 3.8 மில்லியன் வகை பூஞ்சைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இன்னும் முறையாக வகைப்படுத்தப்படவில்லை.

பிரேசிலின் அமேசான் காடுகளில் உள்ள மண்ணில் வியக்கத்தக்க அளவில் பல வகை பூஞ்சைகள் உள்ளன.

மிகவும் வேகமாக வளங்களை இழக்கும் அமேசான் காடுகளை பாதுகாக்க, பூஞ்சைகளின் பண்புகளை புரிந்துகொள்வது அவசியம் என கியூவில் உள்ள பேராசிரியர் அலெக்ஸாண்ட்ரே அன்டோனெல்லி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு டீஸ்பூன் மண்ணில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளை காண முடியும் என்று பேராசிரியர் அலெக்ஸாண்ட்ரே அன்டோனெல்லி குறிப்பிடுகிறார்.

உயிரிப்பன்மய அறிவியலின் அடுத்தக்கட்ட ஆய்வை மேற்கொள்ள பூஞ்சைகள் குறித்து அறிவது மிகவும் அவசியம் என்று அவர் கூறுகிறார்.

அமேசான் காடுகளில் உள்ள 1 டீஸ்புன் மண்ணில் 400 பூஞ்சைகள்:வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

பட மூலாதாரம், NATHALIA SEGATO/UNSPLASH

பூஞ்சைகள் பெரும்பாலும் நிலத்தடியில் புதைந்திருப்பதால், உயிரிப்பன்மய ஆராய்ச்சிகளின்போது அவை புறக்கணிக்கப்படுகின்றன.

வெப்பம் அதிகமுள்ள நாடுகளில் மண்ணில் புதைந்திருக்கும் பூஞ்சைகள் குறித்து சரியான புரிதல் இல்லை. பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் உள்ள மண்ணைப் பற்றி அறிய, அங்குள்ள நான்கு பகுதிகளிலிருந்து மண் மற்றும் இலைக் குப்பைகளின் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர்.

தாவரங்களின் வேர்களில் வாழும் பூஞ்சை, நோய்க்கிருமிகளில் வாழும் பூஞ்சை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பூஞ்சைகளின் வகைகளை மரபணு பகுப்பாய்வு மூலம் அறிய முடிந்தது. அவற்றில் பல பூஞ்சைகளுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை; அவற்றின் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

பொதுவாக பூஞ்சைகளின் வாழ்விடமாக திறந்த புல்வெளிகள் தான் கருதப்படுகின்றன. திறந்தவெளியில் உள்ள மண்ணில் ஊட்டச்சத்து அதிகரிக்க பூஞ்சைகள் உதவும்.

அமேசான் காடுகளில் உள்ள 1 டீஸ்புன் மண்ணில் 400 பூஞ்சைகள்:வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

பட மூலாதாரம், CAMILA DUARTE

உலகளவில் மாற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் மண்ணின் பன்முகத்தன்மையை புரிந்துக்கொண்டால் மட்டுமே காடுகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஜெர்மனியில் உள்ள முனைவர் கமிலா ரிட்டர் கூறுகிறார்.

மண்ணில் கரியமில வாயுவின் அளவை சீராக வைக்கவும் பூஞ்சைகள் தேவை. ஆனால் ஒரு சில வகை பூஞ்சைகளால் செடிகள் மற்றும் பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் உயிரிழக்கவும் பூஞ்சைகள் காரணமாக அமைகின்றன.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

இன்டர்நெஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர் ரெட் லிஸ்ட் ஆஃப் திரிட்டன்டட் ஸ்பிஷிஸ் என்ற சர்வதேச அமைப்பு சுமார் நூற்றுக்கும் குறைவான பூஞ்சைகளை ஆபத்தான வகை பூஞ்சைகள் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆனால் இதுவரை 25,000க்கும் அதிகமான தாவரங்களும், 68,000 விலங்குகளும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டன், பிரேசில், ஜெர்மனி, ஸ்வீடன், எஸ்தோனியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள குழுக்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்த விடயங்கள் எக்கோலஜி அண்ட் எவலூசன் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: