உங்கள் கையெழுத்திலேயே கடிதம் எழுதும் ரோபோ!
உங்கள் கையெழுத்தில் வேறு யாரோ ஒருவர் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்? அதையும் ஓர் இயந்திரம் எழுதினால்?
என்னதான் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இருந்தாலும், கைப்பட ஒரு கடிதம் எழுதுவது அல்லது நன்றி கூறும் அட்டையை அனுப்புவது ஒரு நெருக்கத்தை உணர்த்துவதாகவே இருக்கும். அத்தகைய தொடர்புகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது.
அதையும் தாண்டி எழுத விரும்பினாலும், அதற்கான நேரம் கிடைப்பது அரிது. அதை ஓர் இயந்திரம் செய்து கொடுத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
பேனாவைப் பிடித்து, எழுதக்கூடிய ஓர் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பான்ட் என்ற அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சோனி கேபர்வெல். அவரது இயந்திரம், உங்களது கையெழுத்தைக் கூட கற்றுக்கொண்டு, உங்களைப் போலவே எழுதும் திறன் பெற்றது. அதாவது, அந்த இயந்திரம் பேனாவைப் பிடித்து எழுதும்.
இதுபோன்று கடிதம் அனுப்ப விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணினி, டெப்லட் அல்லது ஸ்மார்ட்ஃபோன் என எதிலிருந்து வேண்டுமானாலும் கடிதங்களை அனுப்பிவைக்கலாம். ஒரு கடிதம் அனுப்புவதற்கான கட்டணம் சுமார் 5 டாலர்கள்.

பட மூலாதாரம், Getty Images
திருமணமான ஜோடிகள், தங்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றிக் கடிதம் அனுப்புதல், தொழில் அல்லது வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்புதல் ஆகியவற்றை இந்த இயந்திரங்கள் மேற்கொள்ளும்.
அழகான அனுபவங்களை ஏற்படுத்தி, மக்களிடையே ஒரு நெருக்கமான உணர்வை உண்டாக்குவதுதான் இதன் நோக்கம் என்கிறார் சோனி.
எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆனால், அதற்கான நேரம் இல்லாதவர்களை தாங்கள் இலக்கு வைத்து, வாடிக்கையாளர்களாக்குவதாக அவர் கூறுகிறார்.
இவையும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













