அமெரிக்கா-வட கொரியா இடையே அதிகரிக்கும் பதட்டம் மோதலில் முடியுமா? (கட்டுரை தொகுப்பு)
அமெரிக்கா-வட கொரியா இடையே உருவான பதட்டம், அதனால் உருவான காட்சி மாற்றங்கள் அனைத்தையும் தொகுத்து இந்த பல்வேறு இணைய பக்கங்கள் மூலம் உங்களுக்கு வழங்குகின்றோம்.
01. கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல அமெரிக்கா சதி - வடகொரியா பகீர் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியாவின் உளவாளிகள் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொல்ல சதி செய்ததாக வட கொரியா குற்றம் சாட்டியிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் தென் கொரிய ஏஜெண்டுகள் வட கொரியத் தலைவரான கிம் ஜோங்-உன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளதாக வட கொரிய தேசிய ஊடகங்கள் கூறியுள்ளன
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல அமெரிக்கா சதி - வடகொரியா பகீர் குற்றச்சாட்டு
02. அபூர்வ செயலாக சீனாவை விமர்சித்துள்ள வடகொரியாவின் அரசு ஊடகம்

பட மூலாதாரம், Reuters
தங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் மூலம், சீனாவை விமர்சிக்கும் மிக அபூர்வநடவடிக்கையை வடகொரியாவின் அரசு ஊடகம் எடுத்துள்ளது.
வடகொரியாவால் அணுஆயுத சோதனை ஆபத்து இருப்பதாக சீன ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக, அரசால் நடத்தப்படும் கொரிய மைய செய்தி ஊடகம் (கேசிஎன்ஏ) மே 3-ஆம் தேதியன்று, குற்றம்சாட்டியது.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: அபூர்வ செயலாக சீனாவை விமர்சித்துள்ள வடகொரியாவின் அரசு ஊடகம்
03. பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்

பட மூலாதாரம், Chandan Khanna/AFP/Getty Images)
சில நாட்களுக்கு முன்பு வரை வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியா என்று பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம்.
உணவு மற்றும் மருந்து உதவிகள் தவிர வட கொரியாவோடு இருக்கும் பிற எல்லா வர்த்தகங்களையும் நிறுத்திவிடுவதாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் தகவல் வெளியிட்டது.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்
04. வடகொரிய ஏவுகணைகளை அழிக்க இயங்கத் துவங்கியது அமெரிக்காவின் `தாட்" தடுப்பு முறை

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும் இது வடகொரியாவின் ஏவுகணைகளை இடைமறிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வடகொரிய ஏவுகணையை எதிர்கொள்ள அமெரிக்காவின் `தாட்' இயங்கத் துவங்கியது
05. கொரியப் பிரச்சனை: அமெரிக்க விநியோக கப்பலை பாதுகாக்க ஜப்பான் போர்க்கப்பல்

பட மூலாதாரம், AFP/Getty Images
ஜப்பான் தன்னுடைய ராணுவ பங்களிப்பை விரிவாக்குவதற்கு சர்ச்சைக்குரிய சட்டங்களை இயற்றிய பின்னர், முதல் நடவடிக்கையாக அது தன்னுடைய மிக பெரிய போர்க்கப்பலை அமெரி்க்க போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனுப்பியுள்ளது.
ஜப்பானின் கடற்பரப்பிற்குள் இருக்கும் அமெரிக்க விநியோகக் கப்பலுக்கு ஹெலிகாப்டர் தாங்கியான `ஈஸூமோ` போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்குகிறது.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: கொரியப் பிரச்சனை: அமெரிக்க விநியோக கப்பலை பாதுகாக்க ஜப்பான் போர்க்கப்பல்
06. காணொளி: வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்
வட கொரியா உடனான எல்லையிலிருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கூட்டு ராணுவப்பயிற்சியை நடத்தியுள்ளன.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்
07. வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; டிரம்ப் கோபம்

பட மூலாதாரம், EPA
வடகொரியா மீண்டும் பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை இன்று நடத்தியுள்ளதாக தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏவுகணை மேலெழும்பிய சில நொடிகளில் வெடித்து சிதறியது என்று தென் கொரியா ராணுவம் கூறியதாக யன்ஹப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; டிரம்ப் கோபம்
08. வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

பட மூலாதாரம், Reuters
வட கொரிய பிரச்சனையை சீன அதிபர் ஷி ஜின்பிங் கையாளும் விதம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். ஷி ஜின்பிங், தன்னுடைய நாடான சீனாவை நேசிக்கின்ற "நல்லதொரு மனிதர்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ராய்டஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், வட கொரிய பிரச்சனைக்கு ராஜீய வழிகளில் தீர்வு காண விரும்புவதாகவும், அது முடியாத பட்சத்தில், போர் தவிர்க்க முடியாமல் போகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்
09. வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்

பட மூலாதாரம், AFP
வட கொரியா மேற்கொண்டு வரும் அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அதற்கு அழுத்தம் தர ராஜ்ஜிய ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும், தடைகளை மேலும் இறுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
செனட் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட ஒரு சிறப்புக்கூட்டத்துக்குப் பின், வட கொரியாவுக்கு எதிரான அதிபர் டொனால்ட் டிரம்பின் வியூகம் அறிவிக்கப்பட்டது.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்
10. வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தடைந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம், FP/Getty Images
வட கொரியாஇன்னொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியவை வந்தடைந்துள்ளது.
ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்சிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு சேரவுள்ளது.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
11. "அமெரிக்க போர் கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்"

பட மூலாதாரம், AFP
கொரிய தீபகற்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை "மூழ்கடிக்க" வட கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் போர் கப்பலான கார்ல் வின்சனை "ஒரே ஒரு அடியில் மூழ்கடித்துவிட முடியும்" என்ற எச்சரிக்கை நோடாங் ஷின்முன் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: "அமெரிக்க போர்கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்"
12. வடகொரியா பதற்றம் : அணுஆயுத அச்சுறுத்தல்கள் பற்றி சீனா 'தீவிரமாக கவலை'

பட மூலாதாரம், Reuters
வடகொரிய உயரதிகாரி ஒருவர் பிபிசிக்கு அளித்த பேட்டியை அடுத்து, வடகொரியா அணுஆயுதங்களை அபிவிருத்தி செய்துவருவது குறித்து தீவிரமான கவலைகள் கொண்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் வெளியுறவு துணையமைச்சர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளை தொடரும் என்றும், அமெரிக்கா தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக அது கருதினால், முன்கூட்டியே அணுஆயுத தாக்குதலை நடத்தும் என்றும் கூறியிருந்தார்.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வடகொரியா பதற்றம் : அணுஆயுத அச்சுறுத்தல்கள் பற்றி சீனா 'தீவிரமாக கவலை'
13. வடகொரியாவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? அமெரிக்கா - சீனா தீவிர ஆலோசனை

பட மூலாதாரம், Reuters
வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டம் பதற்றத்தை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றி பல தரப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுப்போன்ற சூழல் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்பதில் பலருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக ஏ பி சி செய்தி நிறுவனத்திடம் ராணுவ தளபதி எச் ஆர் மெக்மாஸ்டர் கூறினார்.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வடகொரியாவுக்கு பதிலடி எப்படி?: தீவிர ஆலோசனையில் அமெரிக்கா - சீனா
14. "அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

அணு ஆயுத தாக்குதல் மூலம் திருப்பி தாக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள வட கொரியா, கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.
வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: "அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை
15. அமெரிக்கா - வடகொரியா இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: சீனா

பட மூலாதாரம், Reuters
வடகொரியா தொடர்பாக பதற்றம் அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்று சீனா எச்சரித்துள்ளது. போர் ஏற்பட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எச்சரித்துள்ளார்.
எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற எண்ணம்தான் உருவாகியுள்ளதாகவும், சிக்கலை மேலும் அதிகரித்து, நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று இரு தரப்பினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: அமெரிக்கா - வடகொரியா இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: சீனா
16. வட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
வட கொரியாவிடமிருந்து வரும் அணு சோதனை அச்சுறுத்தலை சீனாவுடன் சேர்ந்தும் அல்லது சீனாவின் உதவி இல்லாமலும் அமெரிக்காவால் "தனியாக தீர்க்க" முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"சீனா இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் அமெரிக்கா அதனை செய்யும் என நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என பிரிட்டன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியை தொடர்ந்து படிக்க: வட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













