வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; டிரம்ப் கோபம்

பட மூலாதாரம், EPA
வடகொரியா மீண்டும் பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை இன்று நடத்தியுள்ளதாக தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏவுகணை மேலெழும்பிய சில நொடிகளில் வெடித்து சிதறியது என்று தென் கொரியா ராணுவம் கூறியதாக யன்ஹப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வட கொரியாவின் எல்லையை ஏவுகணை தாண்டவில்லை என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை வேளையில், வடபுற பியோங்யாங்கில் உள்ள தென் பியோன்கன் மாகாணத்தில் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
என்ன வகையான ஏவுகணை என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
''தோல்வியில் முடிந்திருந்தாலும் கூட ஏவுகணை செலுத்தியதன் மூலம் சீனாவின் விருப்பத்தையும் பெரிதும் மதிக்கக் கூடிய அந்நாட்டு அதிபரையும், வட கொரியா அவமதித்துள்ளது. இது மோசம்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுவரை வட கொரியா ஏவுகணை சோதனை குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
வட கொரியா மற்றும் தென் கொரியா இரண்டும் ராணுவ பயிற்சிகளை நடத்திவரும் நிலையில், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பிற கட்டுரைகள், செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












