உங்கள் ரத்த வகை மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்குமா?
சில குறிப்பிட்ட இரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருப்பதாக ஓர் அறிவியல் ஆய்வு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உயர் இரத்த அழுத்தம் கொண்ட புரதத்தின் அளவைக் கொண்டிருக்கும் A, B மற்றும் AB ரத்த வகைகளை கொண்ட நபர்களுக்கு, இந்த வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Science Photo Library
இருதய நோய் தொடர்பான அபாயத்தை மருத்துவர்கள் சுலபமாக புரிந்துக் கொள்வதற்கு, இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று நெதர்லாந்தின் க்ரோனின்கென் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








