சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுத் தீர்ப்பு

இந்தியாவில் நாடு தழுவிய அளவில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை ஒரே நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடத்தப்படும் என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்திய உச்சநீதிமன்றம்

பல மாநில அரசுகளை ஆட்சேபங்களை ஏற்க மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மறுத்துவிட்டது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதிகளையும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள அட்டவணையின்படி முதல்கட்டத் தேர்வு மே 1ஆம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்வு ஜுலை 24ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது.

முடிவுகள் ஒரேகட்டமாக ஆகஸ்ட் 17 வெளியாகும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளத்.

தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையை பல கட்சிகளின் அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து கண்டித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழக மாணவ மாணவியரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழக அரசும் மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அழுத்தம் தரவேண்டுமெனக் கோரியுள்ள அவர், மத்திய அரசு தமிழகத்தைப் பொறுத்த வரையிலாவது நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாகப் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதி பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் எனவும் அவர் கோரியுள்ளார்.