ராகுல் மற்றும் சோனியாவுக்கு பிணை

இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் அவரது மகனான ராகுல் காந்தி ஆகியோருக்கு ஊழல் வழக்கு ஒன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ராகுல் மற்றும் சோனியாவுக்கு பிணை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ராகுல் மற்றும் சோனியாவுக்கு பிணை

டில்லியில் நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சி நிதியை ஒரு பத்திரிகை நிறுவனத்தை சட்டத்துக்கு விரோதமாக வாங்க தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, இந்த வழக்கை ஆளும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்தனர்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டை நிராகரித்த இருவரும், குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறியுள்ளனர்.

நீதிமன்ற விசாரணையின்போது இருவரும் எதுவும் பேசவில்லை.

இந்தியாவின் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுவது 1970க்கு பின்னர் இதுதான் முதல்தடவையாகும்.