இந்தியாவில் ஐஎஸ் குழுவினருக்கு எதிராக 'ஃபத்வா'

பட மூலாதாரம், AFP
இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் மத போதகர்கள் ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) குழுவை கண்டித்து ஃபத்வா- மத தீர்ப்பை அளித்துள்ளனர்.
நாடெங்கிலுமிருந்து 100 பள்ளிவாசல்கள், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள், ஐஎஸ் ஆயுதக்குழுவின் நடவடிக்கைகள்
இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானவை என்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்களுக்கு இந்த ஃபத்வா- ஆணை அங்கீகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சமூகத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
உலகின் மூன்றாவது பெரிய முஸ்லிம் சனத்தொகை இந்தியாவில் தான் உள்ளது.
சிரியாவிலும் இராக்கிலும் உள்ள இஸ்லாமிய அரசு குழுவினருடன் இணைந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து செல்ல முயன்ற டஜன் கணக்கான இளைஞர்களை அதிகாரிகள் கடந்த சில மாதங்களில் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








