மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து

நரேந்திர மோடிக்கு பாக் பிரதமர் வாழ்த்து

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, நரேந்திர மோடிக்கு பாக் பிரதமர் வாழ்த்து

கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சியை மாபெரும் வெற்றிக்கு இட்டுச் சென்ற அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை அழைத்து, தனது வாழ்த்துக்களை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் தெரிவித்தார் என்று புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் நரேந்திர மோடியை பாகிஸ்தானுக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும் புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பஸித் தெரிவித்துள்ளார்.

இன்று பாகிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பஸித் பாகிஸ்தானும் இந்தியாவும் அண்டை நாடுகள் என்றும், எனவே இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்கு ஒருவருக்கொருவர் பேசி தங்களின் உறவுகளை சீராக்க முயலவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் முடிவுகள் சார்ந்த உரையாடலுக்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும், அத்தகைய இருதரப்பு ஈடுப்பாடு விரைவில் துவங்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.