கொல்கத்தா பாலியல் வல்லுறவுக்கு எதிராக 3வது நாளாக ஆர்ப்பாட்டம்

பாலியல் கொடூரங்களைத் முறியடிப்பதற்கான சட்டம் வந்த பின்னரும் களநிலைமை மாறவில்லை: மகளிர் அமைப்புகள்
படக்குறிப்பு, பாலியல் கொடூரங்களைத் முறியடிப்பதற்கான சட்டம் வந்த பின்னரும் களநிலைமை மாறவில்லை: மகளிர் அமைப்புகள்

கொல்கத்தாவில் 16 வயது பெண்பிள்ளை கூட்டாக -பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டமையைக் கண்டித்து மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

கடந்த அக்டோபரில் இந்தச் சிறுமி 6 பேரால் இரண்டு தடவைகள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்களுக்கு எதிராக காவல்துறையிடம் முறைப்பாடு செய்த பின்னரே, அந்தச் சிறுமி இரண்டாவது தடவையாக வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள்

புத்தாண்டுப் பிறப்புக்கு முதல்நாள் இரவு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டு அவள் கொல்லப்பட்டாள்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண்பிள்ளையையும் அவளது குடும்பத்தையும் காப்பாற்ற காவல்துறை தவறிவிட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை முறியடிக்க புதிய சட்டம் வந்துவிட்ட பின்னரும் களநிலைமையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.