சென்னை செஸ் ஒலிம்பியாட்: அதிக எண்ணிக்கையிலான அணிகள் பங்கேற்பு - வேறு என்னென்ன சிறப்புகள்?

thambi

தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு, அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மற்றும் அணிகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் என்கிற சிறப்பை நிகழ்த்த உள்ளது.

பொதுவாக இந்த நிகழ்ச்சியின் திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் செய்ய ஒவ்வொரு நாட்டுக்கும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கிடைக்கும்.

ஆனால் கடைசி நேரத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக்கு பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு நான்கு மாதங்களில் அனைத்தையும் தயார் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மற்றும் அணிகள் பங்கேற்கும் சாதனையை நிகழ்த்த இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக ஒரே சமயத்தில் 707 செஸ் போர்டில் 1,414 வீரர்கள் பங்கேற்ற பயிற்சி போட்டி இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் அதிக போர்டுகளில் நடந்த போட்டியை இணையம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்த சாதனையை சென்னை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி படைத்துள்ளது.

நிகழ்ச்சியை நடத்தும் நாட்டிலிருந்து மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கும் நாடுகள் எண்ணிக்கையை பொருத்து மொத்த எண்ணிக்கையை இரட்டைப்படை எண்ணாக மாற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் நாட்டின் அணிகளின் எண்ணிக்கையை கூட்ட வாய்ப்பு வழங்கப்படும். அந்த வகையில் அதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளின் சார்பில் தலா மூன்று அணிகள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

chess olympiad advertisement

பெண்கள் பிரிவில் அதிக அளவிலான அணிகள் பங்கேற்கும் சாதனையும் நிகழ்வதற்கான சாத்தியமும் இந்த முறை அமைந்து உள்ளது.

ஒலிம்பியாட் முதலில் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் நடந்துகொண்டிருக்கும் ரஷ்ய-யுக்ரேன் போர் காரணமாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) புதிய ஏலதாரர்களைத் தேடத் தொடங்கியது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழகம் பெற்றது.

இந்த வாய்ப்பை சவாலாக ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, விரைவாக ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதோடு சாதனைகளையும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு சார்பில் 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பில் 24×7 கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் அமைந்துள்ள நேப்பியர் பாலம்
படக்குறிப்பு, சென்னை மெரினாவில் அமைந்துள்ள நேப்பியர் பாலம்

நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் அதிகபட்ச பார்வையாளர்கள் செல்வதை உறுதி செய்வதற்காக, மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்காக ஐந்து ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்துகளை இலவசமாக இயக்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான 'தம்பி' என்கிற தமிழக பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த குதிரையின் உருவ பொம்மை தமிழகம் முழுவதும் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாநிலம் முழுக்க இதற்காக அலங்காரங்கள் செய்யப்பட்டு தமிழகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் நட்சத்திர விடுதியில் 80,000 சதுர அடி பரப்பளவில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவற்காக, சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பொது மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ முகாம்கள் உட்பட தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது.

மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவில் இன்று அதிகமான செஸ் வீரர்கள் உள்ளனர், அதேபோல AICF (அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பு) மற்ற எந்த நாட்டையும் விட அதிக கிராண்ட்மாஸ்டர் அளவிலான போட்டிகளை நடத்துகிறது.

மேலும் எந்த நாட்டையும் விட உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்கிறது இந்தியா.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்யா மற்றும் சீனா பங்கேற்காத நிலையில், இந்திய அணி (1) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, அமெரிக்க அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :