சஞ்சு சாம்சன் 89 ரன்கள் எடுத்து அவுட் - 150 ரன்களை கடந்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரது விக்கெட்டை வில் ஜாக்ஸ் வீழ்த்தினார்.
13 ஓவர்கள் முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் வெறும் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சிவம் துபே 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து களத்தில் உள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் களம் இறங்கியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சஞ்சு சாம்சன் - இஷான் கிஷன் கூட்டணி
அபிஷேக் சர்மா விரைவாக அவுட் ஆனபோதும் சஞ்சு சாம்சன் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை தந்தார். இருப்பினும், அவருடன் கூட்டணி அமைத்த இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சனும் இஷான் கிஷனும் இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தனர்.
முன்னதாக, அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற இங்கிலாந்து
இந்த அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

பட மூலாதாரம், Getty Images
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












