தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்: சில முக்கிய தகவல்கள்

மஞ்சப்பை

பட மூலாதாரம், Twitter

தமிழகத்தில் "மீண்டும் மஞ்சப்பை - விழிப்புணர்வு இயக்கம்" நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மஞ்சள் பைதான் சூழலுக்கு - சுற்றுச்சூழலுக்கு சரியானது - அழகான - நாகரிகமான - பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம்," என்றார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும்"

"நீர்நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன இவ்வாறு பல பாதிப்புகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் நிறுத்தியாக வேண்டும்," என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், "அரசாங்கம் மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்." என்றார்.

இந்நிலையில் #மீண்டும்_மஞ்சப்பை என்ற ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி இந்த விழிப்புணர்வு பிரசாரம் குறித்த தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு குட் பை சொல்லிவிட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரியமான மஞ்சப்பை வழக்கத்தை மீட்டெடுப்போம்," என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு இது ஒரு நல்ல பிரசாரம் என்று பலர் கருத்து தெரிவித்தாலும், 2018ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த பிளாஸ்டிக் தடையின் நிலை என்ன? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அரசு விதித்த தடை அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு அப்போது தெரிவித்திருந்தது.

முன்னதாக, "மீண்டும் மஞ்சப்பை" விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: