நரேந்திர மோதி தொடங்கி வைத்த கோரக்பூர் தொழிற்சாலை: படங்கள் உண்மைதானா?

பட மூலாதாரம், Pib india
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோதி, கடந்த செவ்வாய்க்கிழமை உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் 9,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இவற்றுள், ரசாயன உரத் தொழிற்சாலை ஒன்றும் அடக்கம்.
இந்நிலையில், புதிதாகத் திறக்கப்பட்ட ரசாயனத் தொழிற்சாலை என்று சில படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தது பிபிசி தமிழ்.
பரவும் செய்தி:
"முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கனவு நிறைவேறியது. கோரக்பூர் உரத்தொழிற்சாலை நிறைவு பெற்றது" என்று குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, உத்தர பிரதேச மாநிலம் பிந்த்ரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவதேஷ் சிங் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். கோரக்பூர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊராகும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதேபோல, பல்வேறு சமூக வலைதளப் பதிவர்களும் இதே காணொலியைப் பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.
விண்ணை முட்டும் கட்டடங்களும், கண்ணைக் கவரும் வடிவமைப்பும் கொண்ட படங்கள் உண்மைதானா?
உண்மை என்ன?
குறிப்பிட்ட வீடியோ பதிவில் பயன்படுத்தப்பட்டிருந்த படங்களை சோதித்துப் பார்த்தபோது, படங்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சாலைகளின் படம் என்பது தெரிய வந்தது.

பட மூலாதாரம், @DrAvadheshBJP twitter screenshot
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இயங்கி வரும் டவ் வேதித்தொழிற்சாலையின் படம் இது.
இரண்டாவது படம்:
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் உர நிறுவனமான சம்பல் நிறுவனத்தின் ஆலை இது.

பட மூலாதாரம், @DrAvadheshBJP twitter sc
சம்பல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் இந்த படம் கிடைக்கிறது.
மூன்றாவது படம்:
குஜராத் மாநிலம் ஜாம் நகர் பகுதியில் இயங்கி வரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு ஆலையான நயாரா எனர்ஜி குழுமத்தின் ஆலை இது.

பட மூலாதாரம், @DrAvadheshBJP twitter screenshot
நான்காவது படம்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்.என்.ஜி. ஆலையின் படம் இது.
முன்பே (2018 , 2019ஆம் ஆண்டுகளில் ) பல்வேறு செய்தி இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், @DrAvadheshBJP twitter screenshot
5ஆவது படம்:
நைஜீரியாவில் இயங்கி வரும் பியூஏ பெட்ரோலிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையின் படம் இது.

பட மூலாதாரம், @DrAvadheshBJP twitter screenshot
முடிவு:
அந்தக் காணொளியில் கோரக்பூர் உரத் தொழிற்சாலையின் படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

பட மூலாதாரம், @DrAvadheshBJP twitter screenshot
கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்த உரத்தொழிற்சாலை குறித்த தகவல்களுடன், உலவும் வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு படத்தைத் தவிர பிற படங்கள் கோரக்பூரின் உரத் தொழிற்சாலையின் படங்கள் அல்ல.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












