தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிவிப்பு: 'வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடக்கும்போது சூறாவளி வீசும்'

தமிழ்நாடு வானிலை அறிவிப்பு
படக்குறிப்பு, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்திருந்தது.

நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 - 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஐந்து முக்கிய தகவல்கள்.

1.நவம்பர் 10 அன்று தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும் , புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், காவிரி டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் புதுவையின் காரைக்கால் மாவட்டம் ஆகியவற்றின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சென்னை மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2. சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் மழை நீரின் நடுவே நடந்து செல்லும் மூதாட்டி

பட மூலாதாரம், Abhishek Chinnappa / getty images

படக்குறிப்பு, சென்னையில் மழை நீரின் நடுவே நடந்து செல்லும் மூதாட்டி

3. கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

4. இன்று (நவம்பர் 11) திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

5. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :