"இந்தி படிங்க...": ஜொமேட்டோ ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்த நிர்வாகம் - என்ன நடந்தது?

zomato

பட மூலாதாரம், Getty Images

இந்தி நமது தேசிய மொழி, அதை சிறிதளவாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதால் சர்ச்சைக்குள்ளாகி நீக்கப்பட்ட ஊழியர், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஜொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்திருக்கிறார்.

உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவு ஊழியர், வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறிய ஜெமாட்டோ, இந்த நிகழ்வுக்காக மன்னிப்புக் கோரியது.

இந்த நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜொமாட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், அந்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவாகத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தில் ஒருவர் அறியாமல் செய்த தவறு தேசியப் பிரச்னையாகியிருக்கிறது. நமது நாட்டில் சகிப்புத்தன்மையின் அளவு இப்போதிருப்பதைவிட இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். இதில் யார் மீது குற்றம் சொல்வது?

அந்த வகையில், அந்தப்மீண்டும் பணிக்குச் சேர்த்துக்கொள்கிறோம். இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் அந்தப் பெண்ணை பணிநீக்கம் செய்யக்கூடாது. அவர் இதனை எளிதில் கற்றுக்கொண்டு முனஅனோக்கிச் செல்ல முடியும்.

எங்கள் கால் சென்டர்களில் இருப்பவர்கள் மிகவும் இளையவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் பணிக்காலத்தின் ஆரம்ப நிலையில், கற்றுக்கொள்ளும் பருவத்தில் இருக்கிறார்கள். மொழி உணர்வு, பிராந்திய உணர்வு குறித்த விஷயங்களில் அவர்கள் நிபுணர்கள் அல்ல. நானும்கூட நிபுணரல்ல.

இந்த முழுமையற்ற தன்மையை பரஸ்பரம் சகித்துக் கொள்வோம். ஒருவர் மற்றவர்களின் மொழிகள், பிராந்திய உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்படுவோம்.

தமிழ்நாடு - நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாட்டின் பிற பகுதிகளை நேசிப்பதைப்போலவே உங்களையும் நேசிக்கிறோம். அதைவிட அதிகமாகவோ, குறைவாகவோ அல்ல. நம்மிடம் எவ்வளவு வேற்றுமைகள் இருக்கிறதோ அதேபோல நாம் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து முதலில் ட்விட்டரில் பதிவிட்ட விகாஸ், மீண்டும் அந்த ஊழியரை பணியில் சேர்க்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

"இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்ததுபோக, மீண்டும் அந்த ஊழியரை பணியில் சேர்க்க வேண்டுமெனக் கோருகிறேன். பதிலாக, அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். தமிழர்களின் மரபு சுயமரியாதை யே தவிர பழி வாங்குதல் அல்ல" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதற்கிடையில், #HindiIsNotNationalLanguage, #Hindi_Theriyathu_Poda ஆகிய ஹாஷ்டாகுகள் டிரெண்டாகி வருகின்றன.

காங்கிரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்தியாவிற்கென தேசிய மொழி ஏதும் கிடையாது. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. இந்தியாவில் உள்ள 22 அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்று. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மதிப்போம். எல்லா மொழிகளையும் மதிப்போம். எங்கள் மீது இந்தியைத் திணிக்காதீர்" என தெரிவித்திருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

முன்னதாக, நேற்று மாலை ஆறு மணியளவில் விகாஸ் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தான் ஜொமேட்டோ செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்தபோது, தான் ஆர்டர் செய்ததில், ஒரு உணவுப் பொருள் வராதது குறித்து ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார்.

அந்த பிரதிநிதி, "இந்தி தெரியாததால் பணத்தைக் கொடுக்க முடியாது," என கூறியதாகவும், அந்த வாடிக்கையாளர் பிரதிநிதிக்கு தமிழ் தெரியாததால், தன்னைப் பொய்யர் என கூறியதாகவும் விகாஸ் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அந்த ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதியுடன் தான் நடத்திய சாட் உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட்களையும் விகாஸ் ட்விட்டர் பக்கத்தில் இணைத்திருந்தார்.

அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில் "இந்த விவகாரம் குறித்து ஹோட்டலைச் சேர்ந்தவர்களிடம் பேச முயன்றாலும் மொழிப் பிரச்னை காரணமாக முழுமையாகப் பேச முடியவில்லை" என அந்த பிரதிநிதி கூறுகிறார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

அதற்கு விகாஸ், "அது என் பிரச்னையில்லை. ஜொமமேட்டோ தமிழ்நாட்டில் இயங்கும்போது, மொழி புரிந்தவர்களை பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். வேறொருவருக்கு இந்த விவகாரத்தை மாற்றிவிட்டு, எனக்குப் பணத்தை வாங்கித்தாருங்கள்," என்கிறார்.

ஸ்கிரீன் ஷாட் ஆதாரங்களை பகிர்ந்த வாடிக்கையாளர்

zomato

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன்னை இந்தி கற்றுக் கொள்ள அறிவுறுத்திய ஜொமேட்டோ பிரதிதியின் உரையாடலை விகாஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தவுடன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார், "எப்போதிலிருந்து இந்தி இந்தியாவின் தேசிய மொழியானது?" என தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக ஜொமேட்டோவை டேக் செய்து கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதி, "உங்களது அன்பான கவனத்திற்கு... இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவரும் சிறிதளவாவது இந்தி அறிந்திருக்க வேண்டும்," என குறிப்பிடுகிறார்.

இந்த ஸ்க்ரீன் ஷாட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விகாஸ், இதற்கு பதிலளிக்கும்படி ஜொமேட்டோவை டேக் செய்து விளக்கம் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஜொமேட்டோ, "இது ஏற்க முடியாதது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதனைத் தீர்க்கப் பார்க்கிறோம். உங்களது தொலைபேசி எண்ணை பகிருங்கள்" எனக் கூறியிருந்தது.

தன்னைப் பொய்யர் என்று கூறியதோடு இந்தி கற்றுக்கொள்ளும்படி தெரிவித்த நபர் இது தொடர்பாக, வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பதிலளித்தார் விகாஸ்.

இதையடுத்து, "தொலைபேசி மூலம் பேசி இந்த விஷயம் தீர்க்கப்பட்டு விட்டதாக" ஜொமேட்டோ தெரிவித்திருக்கிறது.

இந்த விஷயத்தை விகாஸ் ட்விட்டரில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார், "எப்போதிலிருந்து இந்தி இந்தியாவின் தேசிய மொழியானது?" என தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக ஜொமேட்டோவை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், "தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர் ஏன் இந்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும்? சிறிதளவாவது இந்தி தெரிந்திருக்கவேண்டும் என உங்களது வாடிக்கையாளர்களுக்கு எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? இந்த வாடிக்கையாளரின் பிரச்னையைத் தீர்த்து, மன்னிப்புக் கேளுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

இதைத்தொடர்ந்து பல ட்விட்டர்வாசிகள், ஜொமேட்டோ நிறுவனத்திற்குக் கண்டனம் தெரிவித்து பதிவுகளை இட ஆரம்பித்தனர்.

#RejectZomato, ##stopHindiImposition ஆகிய ஹேஷ்டேக்குகள் மூலம் ஜொமேட்டோவிற்கு எதிரான இடுகைகளை பதிவு செய்தனர். பலர் தங்கள் செல்பேசி செயலிகளில் இருந்து ஜொமேட்டோவை நீக்கி விட்டதாகக் கூறி, அதன் ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிட்டனர்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

வேறு சிலர், ஜொமோட்டோ செயலிக்கு, மிகக் குறைந்த ரேட்டிங்கை அளிக்கும்படி ட்விட்டர்வாசிகளிடம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து, #RejectZomoto என்பது இந்திய அளவில் ட்ரெண்டாக ஆக ஆரம்பித்தது.

இன்று காலையில் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, "குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையை வழங்கி வருகின்றன. எந்த மாநில மொழியில் சேவை தரப்படுகிறதோ அந்த மாநில மொழியில் பேசுவதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை" என்று கூறியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 7

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தேசிய அளவில் பேசப்பட ஆரம்பித்ததையடுத்து, அந்த வாடிக்கையாளருக்கு நடந்த அனுபவத்துக்காக உடனடியாக வருத்தம் தெரிவித்திருக்கிறது ஜொமேட்டோ நிறுவனம்.

மன்னிப்பு கேட்ட ஜொமேட்டோ

"வணக்கம் விகாஸ். எங்களுடைய வாடிக்கையாளர் பிரிவு பணியாளரின் நடத்தைக்காக மன்னிப்புக் கோருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக எங்களுடைய அதிகாரபூர்வமான அறிக்கை இது. அடுத்த முறை உங்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற வாய்ப்பளிப்பீர்கள் என நம்புகிறோம். தயவுசெய்து எங்களை நிராகரிக்காதீர்கள்" எனக் கூறியிருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 8
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 8

"எங்களது வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாசாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்பக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கிறோம்.

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் கருத்துகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த எங்கள் நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் ஒரு முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கெனவே தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால் சென்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

உணவும் மொழியும் ஒவ்வொரு மாநில கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம்" என ஜொமேட்டோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :