கொரோனா தடுப்பை விட கைதுக்கு முன்னுரிமை தந்ததா டெல்லி காவல்துறை?

மோதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீர்த்தி தூபே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் லட்சக்கணக்கில் உயர்ந்து வரும் வேளையில், தலைநகர் டெல்லியில் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள நகர காவல்துறையினர், பிரதமர் மோதியை கேள்வி எழுப்பி சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்ய அதிக அக்கறை காட்டிய நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

கடந்த மே 12 முதல் 16ஆம் தேதி வரையிலான நாட்களில் மட்டும் சுவரொட்டி ஒட்டியதாகவும் அதில் தொடர்புடையதாகவும் கூறி 25 பேரை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அளவுக்கு அந்த சுவரொட்டியில் என்ன இடம்பெற்றிருந்தது?

"மோதி ஜி, ஏன் எங்களுடைய பிள்ளைகளுக்குரிய தடுப்பூசியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள்?"

இந்த ஒற்றை வரி கேள்விதான் ஆட்சியில் இருப்பவர்களை கோபப்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாகவே இந்த கைது நடவடிக்கையை நகர காவல்துறை மேற்கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது அரசுப் பணியில் உள்ளவர் பிறப்பித்த ஒழுங்கு ஆணையை அவமதித்தது, கொரோனா பரவல் சாத்தியமுள்ளபோது அலட்சியமாக நடந்து கொள்வது, பொது இடத்தில் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் அல்லது சுவரொட்டியை இடம்பெறச்செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பலரும் தினக்கூலிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், அச்சக தொழிலாளர்கள். தினக்கூலி அடிப்படையில் இந்த சுவரொட்டிகளை ஒட்டும் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இப்போது கைது செய்யப்பட்ட பலரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ஆனால், அவர்கள் கைவசம் இருந்த செல்பேசிகள் தொடர்ந்து காவல்நிலையத்திலேயே இருப்பதாக பிபிசி அறிந்தது.

இந்த தொழிலாளர்கள்வசம் சுவரொட்டி ஒட்டும் பணியை வழங்கியதாக டெல்லியில் ஆளும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெளிப்படையாகவே கூறியிருக்கிறது.

காவல்துறை விளக்கம் என்ன?

காவல்துறை நடவடிக்கை ஏன் என்று மக்கள் தொடர்பு அலுவலரும் நகர காவல்துறை துணை ஆணையாளருமான சின்மொய் பிஸ்வாலிடம் பிபிசி கேட்டது.

"கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவே நகர் முழுவதும் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் பணிகளுக்காக மட்டுமின்றி, தேர்தல் காலங்களில் கூட கொரோனா வழிகாட்டுதல்கள் விதிமீறல்களில் ஈடுபட்டோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அடிப்படையிலேயே முதல் கட்ட விசாரணையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் பற்றி தெரியவந்ததால் அவர்களை கைது செய்தோம். மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சில ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் பெயர்கள் வெளிவந்தன. அது குறித்து விசாரித்து வருகிறோம்," என்று சின்மொய் பிஸ்வால் கூறினார்.

ஒரு கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடும் தகவல் அடிப்படையில் காவல்துறை செயல்படாது என்றும் சின்மொய் தெரிவித்தார்.

ஆனால், கொரோனா பரவல் காலத்தில் முன்களப்பணியாளர்களாக மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, இப்படி சுவரொட்டி கைதுக்கு அதீத முக்கியத்துவம் தரலாமா என்று அவரிடம் பிபிசி கேட்டது.

மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சின்மொய் பிஸ்வால், டெல்லி காவல்துறை, துணை ஆணையாளர்

அதற்கு அவர், "கொரோனா காலத்தில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்க போராடி வந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உரிய நேரத்தில் கிடைக்கவும் வீதிகளில் கேட்பாரற்று விட்டுச் செல்லப்பட்ட சடலங்கள் உரிய மரியாதையுடன் தகனம் செய்யப்படவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். எனவே, விருப்பு, வெறுப்பின்றி எல்லா பணிகளையும் காவல்துறையினர் சமமாகவே செய்கின்றனர்," என்று பதிலளித்தார்.

டெல்லியில் நகர அரசுக்கு தலைமை தாங்கும் ஆம் ஆத்மி கட்சிதான் பொது முடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருக்கிறது. ஆனால், அதே கட்சியினர்தான் சுவரொட்டி விவகாரத்தில் விதிகளை மீறி சிலரிடம் சுவரொட்டி ஒட்ட பணம் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். ஒருபுறம் வழிகாட்டுதல்களை ஆளும் கட்சி அமல்படுத்துகிறது. மறுபுறம் அக்கட்சியினர் அதை மீறும் வகையில் செயல்படுகிறார்கள் என்கிறார் சின்மொய்.

காவல்துறை பயன்படுத்திய சட்டப்பிரிவுகள்

மோதி

பட மூலாதாரம், Twitter

ஆனால், சுவரொட்டி விவகாரத்தில் பிடிபட்டவர்கள் மீது காவல்துறையினர் பதிவு செய்துள்ள சட்டப்பிரிவுகள், சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அமிதாப் தாகூரிடம் பிபிசி முன்வைத்தது.

"காவல்துறையினர் கைது செய்துள்ள நபர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் 188ஆவது பிரிவு, பெருந்தொற்று தடுப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற சட்டப்பிரிவுகளை பயன்படுத்த அதிகாரம் பெற்றுள்ள அரசு அலுவலருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதே சட்டம், அரசில் இருப்பவர்களிடம் கேள்வி எழுப்ப கூடாது என்று கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. எனவே, மேம்போக்காக பார்த்தால், இந்த சட்டப்பிரிவுகளை சாமானிய மக்கள் மீது பயன்படுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. அதே சமயம், சுவரொட்டி ஒட்டிய செயலை, பெருந்தொற்று பரவ காரணமான செயலாக கருத முடியாது. வேண்டுமானால், அரசுக்கு சொந்தமான இடத்தின் சுவரில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தால், அரசு சொத்துகள் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்திருக்கலாம்," என்கிறார் அமிதாப் தாகூர்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒப்புதலும் காவல்துறையின் மெளனமும்

கடந்த மே 16ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் துர்கேஷ் பாதக் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, தலைநகரில் பிரதமர் மோதியை கேள்வி எழுப்பும் சுவரொட்டிகளை ஒட்ட கைது செய்யப்பட்ட நபர்களை நியமித்தது தாங்கள்தான் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இதுபோன்ற சுவரொட்டியை இந்த நேரத்தில் ஒட்ட என்ன காரணம் என அவரிடம் பிபிசி கேட்டது.

"ஒட்டுமொத்த நாடும் கொரோனா பாதித்த தீவிர நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் வசதி கிடைக்காமல் திண்டாடுகிறது. எனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூட ஆக்சிஜன் கிடைக்காமல் உயிர் விட்டுள்ளனர். எனவேதான் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பும் சுவரொட்டிகளை ஒட்ட முடிவு செய்தோம். ஒரு ஜனநாயக நாட்டில் கேள்வி எழுப்ப கூட உரிமை மறுக்கப்பட்டால் நாங்கள் எங்களுடைய உணர்வை எப்படி வெளிப்படுத்துவது," என்கிறார் துர்கேஷ் பாதக்.

சம்பந்தப்பட்ட 25 பேர் கைது செய்யப்பட்ட நான்கு நாட்கள் கழித்து ஏன் தாமதமாக சுவரொட்டி விவகாரத்தில் தவறு செய்தது தாங்கள்தான் என்று ஆம் ஆத்மி கட்சி ஒப்புக் கொண்டது என கேட்டபோது, தாமதமாக அதை அறிவித்த செயல் மட்டுமே தங்கள் தரப்பு தவறு என்று ஒப்புக் கொண்டார் துர்கேஷ் பாதக்.

ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில், கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறி 25 பேரை கைது செய்த காவல்துறையினர், அந்த சுவரொட்டியை ஒட்டுமாறு கூறியது தாங்கள்தான் என்று ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி பகிரங்கமாக ஒப்புக் கொண்ட பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக இருப்பது அரசியல் காரணங்களுக்காகத்தானா என்ற கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது.

அரசியலான சுவரொட்டி விவகாரம்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஒருபுறம் 25 தினக்கூலிகள் கைது, மறுபுறம் சுவரொட்டி ஒட்டியது தாங்கள் தான் என்று ஒப்புக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி என இந்த விவகாரம் பரபரப்பாக நடந்த வேளையில், வீதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டி வாசகங்களை தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து, "என்னையும் கைது செய்யுங்கள்," என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "பிரதமர் மோதியை கேள்வி எழுப்பும் சுவரொட்டிகளை ஒட்டியது தண்டனைச்சட்டபடி குற்றம் என்றால், அதே சுவரொட்டிகளை நாளை எனது வீட்டு சுவரில் ஒட்டுகிறேன். என்னையும் கைது செய்யுங்கள்," என்று கூறியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்த நாடு இந்திய தண்டனைச்சட்டப்படி இயங்குகிறதா இல்லை மோதியின் சட்டப்படி இயங்குகிறதா என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பி தமது ட்விட்டர் பக்கத்தில் அந்த சுவரொட்டி இடம்பெற்ற காட்சியை பகிர்ந்திருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

சுவரொட்டி வாசகத்துக்கு எதிர்ப்பு ஏன்?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வரும் அதே சமயம், இன்னும் அது அனைத்து மாநிலங்களுக்கும் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இதனாலேயே அரசு தீர்மானித்தபடி 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க அரசால் இயலவில்லை.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு வழங்க ஏற்கெனவே இந்திய அரசு உத்தேசித்துள்ளபடி இதுவரை 60 மில்லியன் டோஸ் மருந்துகள் 95 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விவகாரம் குறித்து ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, "உலகமும் இந்தியாவும் மோசமான கட்டத்தில் உள்ள வேளையில், உலக நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா வழங்கி வருகிறது. அந்தப் பணியில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும்," என்று கூறியிருந்தார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தமது இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி இந்திய தயாரிப்பு மருந்தான கோவாக்சினை வெளிநாடுகளுக்கு அனுப்பும் படங்களை தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்திருந்தது.

இந்தப் பின்னணியில்தான் கொரோனா தடுப்பூசி மருந்தை எங்கள் பிள்ளைகளுக்கு வழங்காமல் வெளிநாடுகளுக்கு தருவது ஏன் என்று பிரதமரை குறிப்பிட்டு அனாமதேய சுவரொட்டிகள் சமீபத்தில் ஒட்டப்பட்டு இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக உருப்பெற்றுள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :