You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் இன்று முதல் தீவிரமாகும் கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: 10 முக்கிய தகவல்கள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதன்படி மே 15ஆம் தேதி முதல் புதிதாக பின்வரும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
1. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நன்பகல் வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இனிமேல் காலை பத்து மணி வரையே இயங்க அனுமதிக்கப்படும். பிற கடைகளைத் திறக்க அனுமதி கிடையாது.
2. டன்ஸோ போன்ற சேவைகள் காலை 6 மணி முதல் 10 மணிவரையே செயல்பட அனுமதிக்கப்படும்.
3. ஏடிஎம், பெட்ரோல் பங்குகள், ஆங்கில மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் ஆகியவை எப்போதும் போல செயல்பட அனுமதி உண்டு.
4. பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வெகுதூரம் செல்ல முயற்சிப்பவர்கள் தடுக்கப்படுவார்கள்.
5. காய்கறி, பூ, பழம் விற்கும் நடைபாதைக் கடைகளைத் திறக்க இனி அனுமதி இல்லை. தேநீர்க் கடைகளைத் திறக்கவும் அனுமதி இல்லை.
6. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம்.
7. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு இ - பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.
8. மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ளவும் இ - பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. 17ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
9. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
10. இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் சேர்வதால் அவற்றைப் பரவலாக்க மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
இந்தக் கட்டுப்பாடுகள் மே 24ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
- நிழல் - திரைப்பட விமர்சனம்
- இஸ்ரேலின் Iron Dome: ஹமாஸ் ராக்கெட்டுகளை அழிக்கும் பிரம்மாஸ்திரம் - அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- புதுச்சேரி துணை முதல்வர் பதவி: ஆர்வம் காட்டாத முதல்வர், பாஜகவின் தனி கணக்கு
- பிளஸ் 2 பொதுத்தேர்வு; வகுப்பறைக்கு 10 பேர் - அமைச்சரின் உறுதியால் அச்சத்தில் ஆசிரியர்கள்
- பிகார் - உத்தர பிரதேச நதிகளில் மிதக்கும் சடலங்கள்: எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும்
- ஃபேஸ்புக் பதிவுகளை மதிப்பிடுபவரின் சாட்சியம்: "தினமும் கொடுங்கனவு"
- தள்ளிப்போகும் 'வலிமை', 'டாக்டர்' படங்களின் வெளியீடு: திணறும் கோலிவுட்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்