RTPCR பரிசோதனைக்கு ஐ.சி.எம்.ஆரின் புதிய ஆலோசனைகள் - யாருக்கு பரிசோதனை தேவை இல்லை?

பட மூலாதாரம், Getty Images
ஏற்கெனவே கொரோனவால் பாதிக்கப்பட்டு சோதனையில் பாசிட்டிவ் என வந்தவர்கள், மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய ஆர்.டி.பி.சி.ஆர் மிக முக்கிய சோதனை முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா விதிமுறைகளுக்கு மத்தியில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்பவர்கள் உட்பட பல விஷயங்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கேட்கப்படுகின்றன.
சமீபத்தில் நடந் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கூட, வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது.
இப்படி ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கான தேவைகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, இந்தியாவில் கொரோனா தொற்றை உறுதிப்படுத்த பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.
பொதுவாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளுக்கான முடிவு, சுமார் 3 நாட்களுக்குப் பிறகு தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கிறது. பெரு நகரங்களில் இது சில நாட்கள் வரை ஆகிறது.
இந்தியாவில் மொத்தம் 2,506 மூலக்கூறு பரிசோதனைக் கூடங்கள் இருக்கின்றன. இந்த பரிசோதனைக் கூடங்கள் மூன்று வேலை நேரமும் செயல்பட்டால் கூட, அவற்றால் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
தற்போது இந்தியாவில் கொரோனா அதிகளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறைய பரிசோதனை விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பரிசோதனை கூடங்களில் பணிபுரியும் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பரிசோதனை கூடங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க, ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதைக் குறைக்க சில ஆலோசனைகளை நேற்று (மே 04, செவ்வாய்கிழமை) முன் வைத்திருக்கிறது ஐ.சி.எம்.ஆர் அமைப்பு.
யாருக்கு எல்லாம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தேவை இல்லை?

பட மூலாதாரம், Getty Images
1. ஏற்கெனவே ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது ரேபிட் ஆன்டிஜென் சோதனை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானவர்கள் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யத் தேவை இல்லை.
2. மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதகள் படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறுபவர்கள் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யத் தேவை இல்லை.
3. ஆரோக்கியமானவர்கள் மாநிலங்களுக்கு இடையில் பயணிக்க தங்களை ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் பரிசோதித்துக் கொள்கிறார்கள். இது முழுமையாக நீக்கப்படலாம் என ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறது.
இந்தியாவில் வரலாறு கணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாசிடிவிட்டி விகிதம் 20 சதவீதமாக இருக்கிறது. பரிசோதனை - பின் தொடர்ந்தல் - தடமறிதல் - சுயமாக தனிமைப்படுத்திக் கொள்வது தான் கொரோனா நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான வழி என ஐ.சி.எம்.ஆர் அமைப்பே தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த செய்தியை ஏ என் ஐ முகமை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்திருக்கிறது.
பிற செய்திகள் :
- மு.க.ஸ்டாலின்: அவதூறுகளைக் கடந்து அரியணை
- போதுமான தடுப்பூசிகளை இந்தியாவால் தயாரிக்க முடியுமா?
- இன்று ஆளுநரை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்
- காலமானார் டிராஃபிக் ராமசாமி: துயர் நிறைந்த இறுதி நிமிடங்கள்
- திமுக சட்டமன்ற குழு தலைவரானார் மு.க. ஸ்டாலின் - அடுத்தது என்ன?
- திருமாவளவனின் 4 வியூகங்கள் - பொதுத்தொகுதிகளில் விசிக வென்றது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












