கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் இல்லாமல் தடுமாறும் டெல்லி மருத்துவமனைகள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 2,100-ஐ கடந்திருக்கிறது.
குறிப்பாக மகாராஷ்டிரம், டெல்லி, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தலைநகரான டெல்லியில் நிலையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை எனலாம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
டெல்லியின் பிரபலமான சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். அடுத்த சில மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. 60 நோயாளிகளின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக ஆக்சிஜன் வேண்டும் எனவும் அம்மருத்துவமனையின் இயக்குநர் குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமையில் செய்தி வெளியானது.
அதே போல டெல்லியின் மற்றொரு பெரிய மருத்துவமனையான மேக்ஸ் மருத்துவமனையும் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மேக்ஸ் ஸ்மார்ட் மற்றும் மேஸ் மருத்துவமனை சாகேத்தில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான ஆக்சிஜன் மட்டுமே கையில் இருப்பதாகவும், அதிகாலை ஒரு மணி முதல் ஆக்சிஜனுக்காக காத்திருப்பதாகவும், டெல்லி முதல்வர், டெல்லி துணை முதல்வர், பிதமர், மத்திய சுகாதார அமைச்சர் என அனைவரையும் டேக் செய்து உதவி கேட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
700-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடி உதவி வேண்டும் எனவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"டெல்லிக்கு ஆக்சிஜன் தருமாறு இருகரம் கூப்பி மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என கடந்த ஏப்ரல் 20-ம் தேதியே டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள என்.சி.ஆர் பகுதிகளில் இருக்கும் பெரு நிறுவன மருத்துவமனைகள் எப்படியோ அடித்துப் பிடித்து நோயாளிகளுக்கு ஆக்சிஜனை வாங்கிக் கொடுத்து தற்காலிகமாக நிலைமையை சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சிறிய மருத்துவமனைகளால், அப்படி அரசிடம் முறையிட்டு ஆக்சிஜனை வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்திகள் வெளியாகியுள்ளது.
உதாரணத்துக்கு கர்கர்டூமாவில் இருக்கும் சாந்தி முகுந்த் மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால், புதிதாக நோயாளிகளைச் சேர்த்துக் கொள்வதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்யவோ அல்லது நோயாளிகளை வீட்டுக்குச் செல்லவோ அறிவுறுத்துவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அம்பேத்கர் நகர், ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி, தீப் சந்த் பந்து, ஜிடிபி, புராரி, தீன் தயால் உபாத்யாய், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் போன்ற அரசு மருத்துவமனைகளில் ஒரு சில மணி நேரங்கள் தொடங்கி அதிகபட்சமாக ஒரு நாளுக்கான ஆக்சிஜன் மட்டுமே கையில் இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சர் கங்காராம், மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, செயின்ட் ஸ்டீஃபன், வெங்கடேஷ்வர், ஸ்ரீ பாலாஜி ஆக்ஷன் மெடிகல் இன்ஸ்டிட்யூட், இந்திரப் பிரஸ்தா அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவமனைகளில் ஒரு சில மணி நேரங்கள் தொடங்கி அதிகபட்சமாக 20 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ரதி, சாந்தோம், சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, தீரத் ராம் ஷா போன்ற தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆக்சிஜனுக்கான தேவை அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டுமே போதுமான ஆக்சிஜன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
சர் கங்காராம் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கிடைத்துவிட்டதாக இன்று காலை 9.45 அணி அளவில் ஏ என் ஐ செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
மாநில அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கிய பின், இந்த மருத்துவமனைக்கு ஐநாக்ஸ் நிறுவனம் 9,000 - 10,000 க்யுபிக் மீட்டர் ஆக்சிஜன் விநியோகிக்க இருப்பதாக சர் கங்காராம் மருத்துவமனையின் தலைவர் கூறியுள்ளார். அதோடு ஆக்சிஜன் போதாக்குறையால் யாரையும் இறக்க விடவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
அதே போல மேக்ஸ் சாகேத் மற்றும் மேக்ஸ் ஸ்மார்ட் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜென் கிடைத்துவிட்டதாக ட்விட்டரில் மேக்ஸ் மருத்துவமனையே பதிவிட்டுள்ளது. ஆனால் அதை வைத்துக் கொண்டு அடுத்த 2 மணி நேரத்தை மட்டுமே சமாளிக்க முடியும் எனவும் அப்பதிவில் கூறியுள்ளது. இன்னும் நிறைய ஆக்சிஜன் வேண்டும் எனவும் கூறியுள்ளது.
தலைநகருக்கு ஆக்சிஜன் விநியோகிக்க பல்வேறு வழிகளில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்:
- கொரோனா இரண்டாவது அலை: நோயாளிகள் உடலில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டில் என்ன சிகிச்சை?
- மகாராஷ்டிர கோவிட் மருத்துவமனையில் தீ விபத்து: 13 நோயாளிகள் பலி
- 'தாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட மகன்' - ஸ்பெயின் அதிர்ச்சி
- ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ இல்லை: ரஜினிகாந்த்
- டெல்லி கொரோனா: காலியான ஆக்சிஜன் - ஆபத்தான கட்டத்தில் நோயாளிகள் - கதறி அழும் மருத்துவர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: