கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களால் பிரச்னை தீருமா?

பட மூலாதாரம், PIB BIHAR
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தேவைப்படும் ஆக்சிஜன் எரிவாயு விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சரக்கு ரயில் சிறப்பு சேவை திங்கட்கிழமை இரவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது ரயில் மும்பையின் கலாம்போலி ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டது.
காலியாகவுள்ள அந்த ரயிலில் உள்ள கன்டெய்னரில் எரிவாயு நிரப்பப்பட்டு மீண்டும் மும்பைக்கே அது கொண்டு வரப்படுகிறது.
"ஒவ்வொரு கம்பார்ட்மென்ட் கன்டெய்னரிலும் 16 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் எரிவாயு கொண்டு வரப்படும் என்றும், ஏழு பெட்டிகள் அந்த ரயிலில் இடம்பெறும்," என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுபோல மேலும் சில ரயில்களை விட ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். இதுவரை சுமார் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் பல பகுதிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக போதுமான படுக்கை வசதிகளோ மருத்துவ வசதிகளோ வழங்க முடியாத நிலையில்தான் மருத்துவமனைகள் உள்ளன.
இதில் வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் எரிவாயு அவசிய தேவையாகும்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், போபாலில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரபல என்டிடிவி தொலைக்காட்சியின் செய்தியில், மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒரே நாளில் ஏழு பேர் பலியாக நேர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.
மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனது சுய தேவைக்கே ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இயலாத நிலை உள்ளது. மறுபுறம், ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மாநிலங்களான குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகியவற்றில் அதற்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது.
அரசு என்ன செய்கிறது?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்திய அளவில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மோசமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட குழு, ஒன்பது தொழிற்துறைகளில் தொழிற்துறை பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு மறுஉத்தரவு வரை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இதேவேளை, கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறக்க நிதிவசதி செய்து தரவும் அரசு முன்வந்துள்ளது.
தொலைதூர பகுதிகளில் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க, சிறு, சிறு ஆக்சிஜன் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.. ஆனால், அந்த நிலையங்கள், கொரோனா தொற்று ஒழிக்கப்பட்ட பிறகு கலைக்கப்படலாம் என்கிறார் வாயு தயாரிப்பு தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் ராஜீவ் குப்தா.
இந்த நிலையங்களில் உற்பத்தியாகும் ஆக்சிஜனின் தரம் 92-93 சதவீதம்வரை தூய்மையானது என்று கூறும் ராஜீவ் குப்தா, அவற்றில் இருந்து ஒன்று முதல் இரண்டு மெட்ரிக் டன்வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்.
ஆனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு எப்படி ஏற்படுகிறது?
ஆக்சிஜன் போக்குவரத்துக்கு ரயில் சேவை அவசியமா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதை விட, அது தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில் நிலவும் விநியோக தடங்கலே அதிகம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
காற்று தொடர்புடைய தயாரிப்பு நிறுவனமான ஐநாக்ஸ் இயக்குநர் சித்தார்த், "இந்தியாவின் ஒரு நாள் ஆக்சிஜன் தேவை 6,500 மெட்ரிக் டன். ஆனால், அது தற்போது தினமும் 7,200 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது," என்கிறார்.
இவரைப்பொருத்தவரை, இந்தியாவில் தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவ பயன்பாட்டுக்காக தேவைப்படுகிறது.
அகில இந்திய தொழில்முறை எரிவாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகி சாகேத் திக்கு, "மகாராஷ்டிராவில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மறுபுறம் ரூர்கேலா போன்ற பகுதிகளிலும் ஹால்டியா இருப்பாலைகளிலும் ஆக்சிஜன் சரக்குகள் தேங்கிக்கிடக்கின்றன," என்றார்.
இந்த ஆக்சிஜனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதென்றால் அதற்கு கிரையோஜினிக் டாங்கர்கள் என்ற சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டாங்கர்கள் அவசியம். அடிப்படையில், ஒறு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும்போது அது காற்று நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாற்றப்பட வேண்டும்.
ரயில் சேவையால் பயன் இருக்குமா?

பட மூலாதாரம், Reuters
இந்த அம்சத்தை சுட்டிக்காட்டும் சாகேத் திக்கு, "கிரையோஜினிக் டாங்கர்களில் -183 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் திரவநிலை ஆக்சிஜன் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், இன்று நாடு எதிர்கொண்டுள்ள தட்டுப்பாடு போல அதன் தேவை திடீரென இப்படி அதிகரிக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்," என்று கூறுகிறார்.
மிகப்பெரிய எரிவாயு தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர், தான் சார்ந்த நிறுவனத்தில் மட்டும் 550 கிரையோஜினிக் டாங்கர்கள் உள்ளதாகக் கூறுகிறார். அந்த டாங்கர்கள் ஏற்கெனவே கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமானது முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என்று அவர் தெரிவிக்கிறார். இத்தகைய சூழலில்தான் அந்த ஆக்சிஜன் டாங்கர்களை ரயில் மூலம் கொண்டு சென்று பயண நேரத்தை குறைக்க அரசின் முயற்சி உதவியிருக்கிறது.
அந்த வகையில், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கிரையோஜினிக் டாங்கர் லாரிகள் சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டு அவை ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் உள்ள நகருக்கும் அது தேவைப்படும் நகருக்கும் இடையிலான பயண நேரத்தை குறைக்கவே பயன்படுகிறது. தட்டுப்பாடு நிலவும் காலத்தில் இப்படி செயல்படலாம் என்ற கொள்கையைத்தான் அரசு வகுத்துள்ளது. அதுவே ரயில்வே அமைச்சகமே மேலும் அதிக அளவிலான கொள்கலன் கொண்ட கிரையோஜினிக் வடிவ சிறப்பு ரயில் பெட்டிகளை அமைத்தால் இந்த ஆக்சிஜனை அதிக அளவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று நிபுணர்கள் யோசனை கூறுகிறார்கள்.
இப்போது எவ்ளவு ஆக்சிஜன் தட்டுப்பாடு சமாளிக்கப்படுகிறது?
அகில இந்திய தொழில்முறை வாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகி சாகேத் திக்கு, "இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே நாளொன்றுக்கு 3000-3,200 மெட்ரிக் டன் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அப்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் ஆக்சிஜன் தட்டுப்பாடும் உயரத் தொடங்கியது," என்றார்.
இந்த துறையில் உள்ள நிபுணர்களைப் பொறுத்தவரை, தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆக்சிஜனின் தரத்துக்கும் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் ஆக்சிஜனின் தரத்துக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. தொழிற்சாலை பயன்பாடு ஆக்சிஜன் 99.5 சதவீதம் தூய்மையானதாகவும் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் 90 சதவீதம் முதல் 93 சதவீதம்வரை தெளிவாகவும் இருக்கும்.
அப்படியென்றால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியபோதே ஆக்சிஜன் உற்பத்தியையும் அதிகரித்திருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஐநாக்ஸ் காற்று தொடர்புடைய தயாரிப்புகள் நிறுவனத்தின் சித்தார்த் ஜெயின், "அடுத்த 36 மாதங்களில் எட்டு புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாங்கள் ரூ. 2,000 கோடி மதிப்பில் உருவாக்கவுள்ளோம்," என்று கூறினார்.
ஒரு ஆக்சிஜன் ஆலையை நிறுவ வேண்டும் என்றால் அதற்கு சராசரியாக 36 மாதங்களாவது தேவைப்படும்.
இதேவேளை, இந்தியாவில் மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை நுகரும் துறையில் இரும்பாலை தொழிற்சாலைகள் முக்கியமானவை என்று ராஜீவ் குப்தா கூறுகிறார். எனவே, நம் நாட்டில் இரும்பாலை தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்பவே ஆக்சிஜன் ஆலைகள் உருவாக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆக்சிஜனை முறையாக பயன்படுத்துவது எப்படி?
சாகேத் திக்கு, "ஆக்சிஜன் பயன்பாட்டின் அவசியத்தை உணர்ந்து அவற்றை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்," என்று கூறுகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 6.5 லட்சம் கொரோனா பாதிப்புகள் அன்றாடம் பதிவாகி வருகின்றன. அவர்களுக்கு 700 முதல் 800 மெட்ரிக் டன்வரை ஆக்சிஜன் தேவை. குஜராத்தில் 60 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு 700 முதல் 800 மெட்ரிக் டன் வரை மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தேவை உள்ளது. கேரளாவால் தினமும் 100 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்த நிலைமையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்று சாகேத் திக்கு கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ராஜீவ் குப்தா, "பல இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவலாம் என கருதி நிறுவனங்கள் அவற்றை மறைத்து வைத்துள்ளன," என்று குற்றம்சாட்டுகிறார்.
குஜராத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கடுமையாகி நிலைமை மோசமாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
மதுராஜ் இண்டஸ்ட்ரீஸ் கேசஸ் நிறுவனத்தின் ஜிக்னேஷ் ஷா, "கொரோனா பரவலுக்கு முன்பு 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி குஜராத்தில் நடந்தது. அதில் 150 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவனைகளுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படும். இப்போது அந்த எண்ணிக்கை 850 முதல் 900 மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது," என்று கூறுகிறார்.
பலரும் எங்களை பார்த்து இரு கரங்களைக் கூப்பி, "எனது தாய் சாகும் தருவாயில் இருக்கிறார். எனது தந்தை மரணத்தின் விளிம்பில் இருக்கிறார். எனது மனைவி சாகக் கிடக்கிறார். தயவு செய்து ஒரு சிலிண்டராவது கொடுத்து உதவுங்கள் என்று கெஞ்சிக் கேட்கிறார்கள். தொண்டை வரை உள்ள உணவு கழுத்துக்கு கீழே செல்ல முடியாத அவலத்தை போல தற்போதைய நிலை உள்ளது. இதுபோன்ற நிலை வரும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை," என்கிறார் ஜிக்னேஷ் ஷா.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












