கொரோனா வைரஸ் : டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு - யாருக்கு விலக்கு?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியத் தலைநகர் டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இதனால், மாநிலங்களுக்கு இடையிலான, யூனியன் பிரதேசத்துக்கு உள்ளான சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழே பட்டியலிடப்பட்டுள்ள வர்த்தகம், அத்தியாவசிய பணிகள் மற்றும் அவற்றுடன் தொடர்பு உடையவர்களுக்கு இந்த கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner
  • உணவு, மளிகைப் பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி, மீன், விலங்குகளுக்கான தீவனம், மருந்தகங்கள், மருத்துவம் சார்ந்த பொருட்கள் மற்றும் சாதனங்களை விற்கும் கடைகள்.
  • வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஏடிஎம் மையங்கள்
  • அச்சு மற்றும் மின்னணு ஊடகம்
  • தொலைத்தொடர்பு, இணைய சேவைகள், கம்பிவட சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள்.
கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு: டெல்லியில் இரவு நேர ஊரடங்கு - எதற்கெல்லாம் விலக்கு?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கோப்புப்படம்
  • இணைய வர்த்தகம் வாயிலான உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பட்டுவாடா.
  • பெட்ரோல் மட்டுமின்றி எல்பிஜி, சிஎன்ஜி உள்ளிட்ட எரிவாயு சம்பந்தப்பட்ட மையங்கள் மற்றும் கிடங்குகள்.
  • எரிசக்தி உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் வழங்கல்களுடன் தொடர்புடைய சேவைகள்
  • குளிர்ப்பதனச் சேமிப்பகம் மற்றும் அது சார்ந்த சேவைகள்
  • தனியார் பாதுகாப்பு சேவைகள்
  • அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மையங்கள்
  • தொடர் இயக்கம் தேவைப்படும் தொழிற்சாலைகள் அல்லது சேவைகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: