தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: வாக்குப் பதிவு தொடங்கியது

வாக்குப் பதிவு
படக்குறிப்பு, சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன், தன் குடும்பத்தினருடன் வாக்களித்தபின்.

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

முன்னதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மாதிரி வாக்குப் பதிவு செய்து காட்டி, இயந்திரங்களை சோதித்து, பிறகு வாக்குப் பதிவை முறைப்படி தொடங்கினர்.

கோவையில் ஒரு வாக்குச்சாவடியில்...
படக்குறிப்பு, கோவையில் ஒரு வாக்குச்சாவடியில்...

நடிகர் ரஜினி காந்த், மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் காலையிலேயே வாக்களிக்க வந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர்கள் அஜித், ஷாலினி ஜோடியும் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர்.

தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: