தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 10 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
வாக்களிக்க செல்கிறீர்களா இந்த பத்து தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளத்திற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
- தமிழ்நாட்டில் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 6,28,69,955 பேர்.
- நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் இந்த தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகும்.
- வாக்காளர் அட்டையை தவிர 11 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவற்றில் ஆதார் அட்டை , பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை அடங்கும்.
- கொரோனா காலம் என்பதால் முகக் கவசம் அணிவதும், ஆறு அடி சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம்.
- வாக்காளர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்படும்.
- கோவிட்-19 தொற்றுள்ளவர்கள் வாக்களிக்க மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு அங்கி அணிந்து வாக்களிக்க வேண்டும்.
- பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். https://electoralsearch.in/ தளத்திற்கு சென்று உங்கள் விவரங்களை கொண்டோ அல்லது வாக்காளர் அட்டை எண் கொண்டோ உங்கள் பூத் ஸ்லிப்பை பார்க்கலாம் அதை நீங்கள் பிரிண்ட் அவுட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
- வாக்களிக்கச் செல்லும் முன் நீங்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திற்குள் சென்று உங்கள் தொகுதியில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பதை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாக்களிக்க செல்லும் முன் இந்தத் தகவல் உங்களுக்கு பயனளிக்கலாம்.
பிற செய்திகள்:
- சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - 400 சொற்களில் எளிய விளக்கம்
- 'மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா' - அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்
- முகேஷ் அம்பானிக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பதவி விலகல்
- தமிழ்நாடு தேர்தல் வரலாறு: அதிரடி திருப்பங்கள், சுவாரசிய சம்பவங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








